சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிசை வீட்டிற்கு தீ வைத்து தாத்தா, பாட்டி கொலை; பேரன் கைது

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தாத்தா, பாட்டியை எரி்த்து கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.கொத்தாம்பாடி கிராமம் பாரதியார் நகரில், காட்டுராஜா (75), இவரது மனைவி காசியம்மாள் வயது (65) என்று இருவரும் கூரை வீட்டின் மீது தகரம் மேய்ந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இன்று 13-ம் தேதி, அதிகாலை 2.30 மணியளவில் இருவரும்

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தாத்தா, பாட்டியை எரி்த்து கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.latest tamil newsகொத்தாம்பாடி கிராமம் பாரதியார் நகரில், காட்டுராஜா (75), இவரது மனைவி காசியம்மாள் வயது (65) என்று இருவரும் கூரை வீட்டின் மீது தகரம் மேய்ந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இன்று 13-ம் தேதி, அதிகாலை 2.30 மணியளவில் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, காட்டுராஜாவின் மூன்றாவது மகன் குமார் என்பவரின் மகன் ரஷ்வந்த் குமார் (16) என்பவர் மேற்படி இருவரும் தங்கி இருந்த வீட்டை பூட்டி வீட்டிற்கு தீ வைத்துள்ளார். அதிலிருந்த காசியம்மாள் தீ காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அதிக தீ பரவிதயதால் தீயணைப்பு துறையினர் தீயை வந்து அணைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது காட்டுராஜாவும் முழுவதும் உடல் எரிந்த நிலையில் இறந்துள்ளார். தற்போது இருவரின் உடலும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தஷ்வந்த் குமார் என்பவர் ஆத்தூர் ஊரக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


latest tamil newsபேரன் ரஷ்வந்த்குமார் தன்னை எப்போதும் தனது பெரியப்பா தேசிங்(51)( கொத்தாம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்(முன்னாள் காங்கிரஸ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர், தற்போது திமுகவில் உள்ளார்) ஒப்பிட்டுப் பேசி வந்ததாகவும் அதனால் கோபமடைந்து தனது பாட்டியும் தாத்தாவும் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு தீ வைத்ததாக, போலீசில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
13-செப்-202120:43:50 IST Report Abuse
THINAKAREN KARAMANI இவ்வளவு சின்னவயதில் இப்படி ஒரு வன்மமா? இந்த மனநிலையோடு வளர்ந்து பெரியவனானால் இன்னும் என்னென்ன விபரீதங்களைச் செய்வானோ? சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே வீட்டிலும் பள்ளியிலும் நல்லொழுக்கங்களைக் கற்பித்து வளர்க்கவேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
13-செப்-202114:13:33 IST Report Abuse
Vena Suna இட ஒதுக்கீடு கலாசார பசங்க.
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
13-செப்-202109:29:14 IST Report Abuse
Hari மிருக சிந்தனை அதிகரிக்கிறது ,ஆன்மீகத்தின் தாக்கம் குறைபாடே இதற்கெல்லாம் காரணம் ,மேலும் உறவுகள் இணக்கம் இல்லாமல் மனித நேயம் பாழ்படுகிறது இதற்க்கு சினிமாத்துறையும் அரசியலும் காரணம்.
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
13-செப்-202117:01:04 IST Report Abuse
DVRRமிருக சிந்தனை இப்போதைய கால கட்டத்தில் சிறிய வயதுடையவர்களுக்கு மகன் / மருமகன் / மக்கள் / மருமகள் / பேரன் / பேத்தி எல்லோருக்கும் ஒரு நோய் தொற்று போல ஆகிவிட்டது இது முடியும் இடம் மரணம் மட்டுமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X