பொது செய்தி

இந்தியா

27 ஆயிரமாக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 27 ஆயிரமாக குறைந்தது.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 27,254 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 37,687 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரத்தை தாண்டியது. தற்போது
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 27 ஆயிரமாக குறைந்தது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 27,254 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 37,687 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 3.74 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 219 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,42,874 ஆனது.


latest tamil news



இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.55 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.12 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி


இந்தியாவில் இன்று (செப்டம்பர் 13) காலை 8 மணி நிலவரப்படி 74.38 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 53,38,945 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (செப்டம்பர் 13-ம் தேதி) காலை 10:10 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 22 கோடியே 54 லட்சத்து 79 ஆயிரத்து 436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 46 லட்சத்து 44 ஆயிரத்து 176 பேர் பலியாகினர். 20 கோடியே 20 லட்சத்து 68 ஆயிரத்து 229 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
13-செப்-202116:32:58 IST Report Abuse
DVRR 20,500 ஆக குறைந்தது எங்கே??? கேரளாவில்???இந்தியா முழுமைக்கும் 27,254????கேரளா-20,500,மகாராஷ்டிரா-5,200, டாஸ்மாக்கினாடு 1,500???டில்லியில் 54 அப்போ மற்ற விடுபட்ட 25 மாநிலங்கள் 5 யூனியன் பிரதேசங்கள் ஸிரோவா??????
Rate this:
Cancel
winline - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-செப்-202111:16:47 IST Report Abuse
winline எங்கள் ஊரில் கொங்சம் குறைய உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X