பஞ்சாபில் எஸ்.சி., இளைஞர்களின் தொழில்கடன் தள்ளுபடி

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சண்டிகர்: தாழ்த்தப்பட்ட பிரிவை (எஸ்.சி.,) சேர்ந்த இளைஞர்களின் ரூ.41.48 கோடி தொழில் கடனை தள்ளுபடி செய்வதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு ஆளும் காங்கிரஸ் அரசு, வாக்குகளைக் கவர பல்வேறு சலுகை மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநில சமூக நீதி மற்றும்

சண்டிகர்: தாழ்த்தப்பட்ட பிரிவை (எஸ்.சி.,) சேர்ந்த இளைஞர்களின் ரூ.41.48 கோடி தொழில் கடனை தள்ளுபடி செய்வதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.



latest tamil news



பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு ஆளும் காங்கிரஸ் அரசு, வாக்குகளைக் கவர பல்வேறு சலுகை மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநில சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சாது சிங் தெரிவித்து உள்ளதாவது:
தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 10,151 இளைஞர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட ரூ.41.48 கோடி தொழில் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. கோவிட் காலத்தில் தொழில்கள் முடங்கியதால், இக்கடன் பெற்ற இளைஞர்கள் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, அவற்றைத் தள்ளுபடி செய்துள்ளோம். இதில், ரூ.50,000 வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.


latest tamil news



இதன் மூலம் கடன் பெற்றவர்கள் நிதி நெருக்கடியில் இருந்து மீள முடியும். மக்கள் நல காங்கிரஸ் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை தாழ்த்தப்பட்ட பிரிவு இளைஞர்களுக்குப் பெரும் நிம்மதி அளிப்பதாக இருக்கும். தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு மட்டுமல்லாது மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கும் இதுபோன்ற தொழில் கடன்களைக் குறைந்த வட்டியில் வழங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
14-செப்-202112:45:07 IST Report Abuse
jayvee சீக்கியம், கிருத்துவம், இஸ்லாம், ஜெயின் என்று அணைத்து மதங்களிலும் ஜாதிகள் உண்டு.. அனால் அதன் பெயர் வேறு மாதிரி இருக்கும் .. அவ்வளவுதான்.. ஜாதி யின் வெறுப்பு கொண்டு மதம் மாறினேன் என்று சொல்லும் முன்னாள் ஹிந்துக்கள் மதம் மாறியது கட்டாயத்தால் அல்லது பணத்திற்காக என்பதே உண்மை.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
13-செப்-202121:11:38 IST Report Abuse
NicoleThomson மீனை கொடுப்பதை விடுத்து மீன் பிடிக்க கற்று கொடுங்க
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
13-செப்-202120:45:15 IST Report Abuse
sankaranarayanan தொழில் செய்வதில்கூட ஜாதிப்பிரிவினையா? என்னடா இந்த உலகம் காங்கிரசு கட்சி எல்லாவற்றிலும் ஜாதி பிரிவினையை ஏற்படுத்தி நாட்டையே குட்டிச்செவிராக ஆக்கிவிட்டது. தொழிலில் நஷ்டம் என்பது எல்லா ஜாதியினருக்கும் உண்டானது தான். தொழில் ஆர்ப்பிக்க ஜாதி - தொழில் பொருட்கள் விற்பனையில் ஜாதி - தொழில் நஷ்டம் பங்கில் ஜாதி - தொழில் நடத்த கிடைத்த கடனை அடைப்பதிலும் ஜாதி - ஜாதியோ ஜாதி - எப்போதுதான் இந்தியாவில் இந்த ஜாதி பிரச்சனை ஒழியுமோ தெரியவில்லை. நேர்மைக்கு திறமைக்கும் இங்கு இடமில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X