அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
சென்னை: ‛‛கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்,'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தி.மு.க., அரசின் வாக்குறுதிகளில் ஒன்றான நகைக்கடன் தள்ளுபடி குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.,13) அறிவித்தார். சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, சட்டசபை விதி 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை
நகைக்கடன், தள்ளுபடி, முதல்வர், ஸ்டாலின், அறிவிப்பு, 5 சவரன்

சென்னை: ‛‛கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்,'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.க., அரசின் வாக்குறுதிகளில் ஒன்றான நகைக்கடன் தள்ளுபடி குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.,13) அறிவித்தார். சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, சட்டசபை விதி 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.


latest tamil news


அதன் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு 5 சவரன் வரையிலான நகைக்கடன் சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும். தகுதியான நபர்களை கண்டறிவதற்காக கடந்த ஒருமாத காலமாக 51 விதமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வுகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய ரூ.6,000 கோடி செலவாகும் என தெரியவந்துள்ளது. நகைக்கடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
16-செப்-202111:20:09 IST Report Abuse
R Ravikumar வரி கட்டிய அப்பாவி மக்களுக்கு என்ன பதில்? ஊரில், கிராமங்களில் அனைவருக்கும் தெரியும் இது ஒரு ஊரறிந்த மோசடி என்று. கடன் தள்ளுபடி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் வாங்குவார்கள் தான் அதிகம். திருப்பி கட்ட மாட்டார்கள். வங்கி என்றால் வாங்கி பைக்குள் போட்டு கொள்வது என்ற நினைப்பில் பண்ணைய பணக்காரர்கள் ஆதிக்கம் . இதில் இ=உண்டு. அப்பாவி மக்களு இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொள்வது உண்டு. ஆனால் ஆட்சி செய்யும் அரசிற்கு ஒரு பொறுப்பு வேண்டாமா? திமுக தள்ளுபடி seivom அதனால் நகை கடன் வாங்கி கொள்ளுங்கள் என்று வெளிப்படையாக பிரச்சாரம் செய்தார்கள். எனக்கு வரி கட்ட வெட்கமாக இருக்கிறது அய்யா .
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
16-செப்-202110:07:04 IST Report Abuse
R Ravikumar எப்படி பகுப்பாய்வு செய்வார்கள்? இதிலும் ஊழல் தான் இருக்கும். கூட்டுறவு சங்கத்திற்கு வேண்டப்பட்டவர் மட்டுமே பயனடைவர். அதுவும் அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர், பண்ணையம் செய்யும் பெரும் விவசாயிகள் மட்டும் பயன் பெறுவார். குறு விவசாயிகள், கூலி தொழிலாளிகள் இந்த பயனை பெற வாய்ப்பு இல்லை. நம் சிஸ்டம் அப்படி. ஒன்றரை லட்சம் மேலே கடன் பெற்றவர் எப்படி ஏழையாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. அதுவும் தவிர வங்கியில் கடன் பெற்றால் திருப்பி அடைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வர வேண்டாமா? இது மேலும் மோசமான உதாரணத்தை கொடுத்து விடாதா? கூட்டுறவு வங்கியில் கடன் பெறுவதே பிறகு தொழிலாக கொள்வார்கள். எனது நண்பனே இது போன்று கடன் வாங்கி திருப்பி காட்டாமல் இருக்க பக்க சூட்சுமங்கள் வைத்து இருக்கிறான். எந்த குறுக்கு வழியில் இந்த பலனை பெறலாம் என்று தெரிந்து இருக்கிறது. மேலும் வரி கட்டிய பிற மக்கள் அறிவு கேட்ட ஜென்மங்கள் அப்படியா? வாக்குறுதி கொடுத்து விட்டதாலே இது போன்ற வீணான விஷயங்களை நிறைவேற்ற வேண்டாம். அதை விட முக்கியமான கேள்வி.. அந்த ஐந்து சவரன் நகை கடன் கிடைத்த பல மக்கள் நியாமாக திருப்பி அடைத்து இருப்பார்களே? அவர்கள் இந்த லஞ்ச பேய்களுக்கு மற்றும் திருப்பி காட்டாத புத்திசாலிகள் மத்தியில் அறிவு கேட்ட ஜென்மங்களாக தெரிவார்கள். அது தான் இந்த திமுக/ஜனநாயக ஆட்சியில் சகிக்க முடியவில்லை .
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-செப்-202119:54:44 IST Report Abuse
Pugazh V நகையை வைத்துக் கடன் வாங்கும் நிலையில் இல்லாதவர்கள் இந்த சிறப்பான , மக்கள் நலத் திட்டத்திற்கு எதிர்மறை கருத்துகள் பதிவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X