பாக்., பணத்தில் வர்த்தகம் செய்ய முடியாது: ஆப்கானிஸ்தான்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதை அடுத்து பாகிஸ்தான் அரசு அதற்கு பெரும் ஆதரவைத் தெரிவித்து வருகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் உள்பட அனைத்து பரிமாற்றங்களுக்கும் ஏற்பாடு செய்யவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் நிதி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்
PAKISTAN, RUPEE, TRADE, AFGHAN, பாகிஸ்தான், பணம், வர்த்தகம், ஆப்கன், மறுப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதை அடுத்து பாகிஸ்தான் அரசு அதற்கு பெரும் ஆதரவைத் தெரிவித்து வருகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் உள்பட அனைத்து பரிமாற்றங்களுக்கும் ஏற்பாடு செய்யவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் நிதி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஷவ்கத்தரின் நிதி தொடர்பான செனட் நிலைக்குழுவிடம், ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய தீர்மானிக்கப்பட்டால் பரிமாற்றத்தின்போது பாகிஸ்தான் பணத்தை பயன்படுத்தலாம். இது வெளிநாட்டு பணத்தை சேமிக்கவும், பணத்தை வலுப்படுத்தவும் உதவும், எனக் கூறினார்.


latest tamil news


இதற்கு மறுப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தான் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அகமதுல்லா வாசிக் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் பணத்தில் வர்த்தகம் செய்யப்படும் என்ற கருத்தில் எந்த உண்மையும் இல்லை. அண்டை நாடுகளுக்கு இடையேயான பணபரிவர்த்தனம் ஆப்கானிஸ்தானுடையதாகவே இருக்கும். நாட்டு மக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்த முடிவும் தலிபான் எடுக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் பாக்., பணத்தில் வர்த்தகம் செய்ய முடியாது என்று ஆப்கானிஸ்தான் முக்கிய நிர்வாகி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
13-செப்-202117:05:40 IST Report Abuse
Rasheel மார்க்க கொடூரங்கள் போதை மருந்தை பண்ட மாற்று செய்து பிழைக்கலாம், ஏற்கனவே கழுதையை ஏற்றுமதி செய்து பாகிஸ்தான் பிழைக்கிறது. ஆப்கானும் 50% பெண்களை படிக்காமல் உழைக்காமல் செய்து, நாடு முழுவதும் உலக பிச்சை எடுத்து பிழைக்கலாம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-செப்-202117:05:39 IST Report Abuse
Natarajan Ramanathan State bank of pakistan வெளியிடும் ரூபாய் நோட்டுகளிலேயே பாதி கள்ளநோட்டுதான் என்பதால் இந்த பயம்....
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
13-செப்-202116:52:17 IST Report Abuse
anbu அவுங்க ரெண்டு பேரையும் அவுங்க பாட்டிலேயே விடுங்க எல்லாம் தானாகவே சரியாகி விடும். கடவுள் பார்த்துக்கொள்வார்.
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
13-செப்-202119:11:05 IST Report Abuse
கௌடில்யன்குழந்தையா பெத்து தள்ளுவாங்க ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X