அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஜன்தன் யோஜனா' திட்டத்தால் கிராமங்களுக்கும் வங்கி சேவை

Added : செப் 13, 2021
Share
Advertisement
துாத்துக்குடி : 'பிரதமர் மோடியின் 'ஜன்தன் யோஜனா' திட்டம் கிராமங்களுக்கும் வங்கி சேவைகளை கொண்டு சேர்க்கிறது' என துாத்துக்குடியில் நடந்ததமிழ்நாடு மெர்கண்டைல்வங்கி நுாற்றாண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.வங்கி முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் ஜெ.வி.ராமமூர்த்தி பேசுகையில், 'நாட்டில் 16 மாநிலங்கள், 4
 'ஜன்தன் யோஜனா' திட்டத்தால் கிராமங்களுக்கும் வங்கி சேவை


துாத்துக்குடி : 'பிரதமர் மோடியின் 'ஜன்தன் யோஜனா' திட்டம் கிராமங்களுக்கும் வங்கி சேவைகளை கொண்டு சேர்க்கிறது' என துாத்துக்குடியில் நடந்ததமிழ்நாடு மெர்கண்டைல்வங்கி நுாற்றாண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வங்கி முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் ஜெ.வி.ராமமூர்த்தி பேசுகையில், 'நாட்டில் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகளுடன் வங்கி உள்ளது. 2021 நிதியாண்டில் வங்கி நிகர லாபம் ரூ.603 கோடியாகி 48 சதவீதம் வளர்ந்தது. 2020 நிதியாண்டில் டிபாசிட் தொகை ரூ.28,736. 2021 நிதியாண்டில் ரூ.31,541 கோடியாக உயர்ந்து நடப்பாண்டில் 40,970 கோடியாக உள்ளது என்றார்.

100 ஆண்டுகள் சாதாரணமல்ல

வங்கி தபால் தலை, 'மொபைல் டிஜி லாபி' நடமாடும் ஏ.டி.எம்., கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் துவக்கி வைத்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

நுாற்றாண்டு விழா கொண்டாடும் வங்கியின் நிர்வாகிகள், ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள். 100 ஆண்டுகள் கடந்தது சாதாரணமல்ல. நியாயமாக மக்களுக்கு உதவியதால் இது சாத்தியமானது.வங்கி துறையில் பணம் உற்பத்தி பொருளாக உள்ளதால் கட்டுப்பாடுஅதிகம். அதற்கு இடையில் இந்த வங்கி முன்னேறி உள்ளது.

2014ல் வராக்கடன் உள்ளிட்ட பிரச்னைகளை வங்கிகள் சந்தித்தன. மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது வங்கிகளுக்கு தாராள நிதி வழங்கி, கடன் வசூலிக்க உதவியது. மத்திய அரசு நடவடிக்கையால் வங்கி துறை நல்ல நிலையில் உள்ளது. நடுக்கடலில்சூறாவளியில் சிக்கியது போன்ற நிலையிலும் டி.எம்.பி., சாதித்துள்ளது.
துாத்துக்குடியில் துவங்கிய வங்கியை அன்று 'நாடார் வங்கி' என அழைத்தாலும் இன்று நாடு தழுவிய அளவில் உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு நாடார் சமூகம் உதவியது குறித்து கிரேக்க எழுத்தாளரே குறிப்பிட்டுள்ளார்.பிரதமரின் 'ஜன்தன் யோஜனா'வங்கி துறையில் டிஜிட்டல் மயம் முக்கியம்.கிராமங்களில் வங்கி கிளை இல்லை என்றாலும்வங்கி சேவை அளிக்கலாம்.

டிஜிட்டல் பரிவர்த்தனைவங்கி, மக்களுக்கு பயனளிக்கிறது. கிராமப்புற ஏழை, எளிய மக்களும் வங்கி சேவைகள் கிடைக்க பிரதமர் மோடி 'ஜன்தன் யோஜனா' திட்டம் கொண்டு வந்தார். இதில் 'ஜீரோ பேலன்ஸ்'ல் கணக்கு துவக்கலாம், 'ரூபே கார்டு', இன்சூரன்ஸ் பெறலாம். வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி.,யில் 'ஆட்டோ பாப்புலேட்டிங் டேட்டா' பயனுள்ளதாக உள்ளது. சிறு, குறு தொழில்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது.

1930ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பட்டியல் இன மக்களை அழைத்து சென்றது முதல் சமூக நிதி இயக்கங்களை முன்னெடுப்பதில் தென்தமிழ்நாடு முதல் இடம் வகிக்கிறது. நாட்டில் உள்ள 130 கோடி மக்கள் தொகையில் 73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் அலை வந்தாலும்ஆக்சிஜன் உள்ளிட்ட வசதியை வங்கிகள் மூலம் பெற முடியும்.

இவ்வாறு பேசினார்.

தபால் துறை தலைவர்நடராஜன், கலெக்டர் செந்தில்ராஜ், வங்கி இயக்குனர்கள், உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். வங்கி துணைத் தலைவர் சிதம்பரநாதன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X