பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி; மாலை 5 மணிக்கு வெளியாகிறது

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் இன்று (செப்.,13) மாலை 5:00 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக
Tamilnadu, Local Body Election, Election Date, ஊரக உள்ளாட்சி தேர்தல், தேதி, தமிழகம்

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் இன்று (செப்.,13) மாலை 5:00 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், செப்டம்பர் 15ம் தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


latest tamil news


இதையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்குப்பதிவு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இனி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
13-செப்-202115:13:21 IST Report Abuse
மணி இல்லையென்றால் இன்னும் நூறாண்டுகளானாலும் இந்திய கிராமங்கள் ஏழைகள் மிகுந்த இடமாகவே இருக்கும்.
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
13-செப்-202113:14:52 IST Report Abuse
மணி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் தற்போதைய பனி எவ்வாறு இருக்கிறதென்பது எப்போதாவது ஆய்வுக்குட்படுத்தப் பட்டிருக்கிறதா? இன்றைய நவீன காலத்தில் இவர்களுக்கு அங்கே என்னவிதமான பணித்தேவை இருக்கிறது? லோக்கல் ரவுடிகள் மோதிக்கொண்டு பதவியை பிடிப்பது பின்னர் லோக்கல் காண்ட்ராக்ட் எடுத்து அதை முழுமையாக முடிக்காமல் அல்லது எதுவுமே செய்யாமல் கணக்கெழுதி அரசு பணத்தை கொள்ளையடித்து செல்வதும், அரசுத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை பயனாளிகளுக்கு சென்றடையாமல் இடையிலேயே பிடுங்கி தின்று கொழுப்பதும், மக்களுக்கும் அரசுக்கும் இடைத்தரகராய் நின்று மக்கள் பணத்தயும் அரசாங்க பணத்தையும் கொள்ளையடிப்பதும்தானே ஆகப்பெருமபாலான உள்ளாட்சி பிரதிநிதிகளால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அக்கிரமம். இத்தகையவர்களை தேர்ந்தெடுப்பதற்கு அரசின் பணம்வேறு வீணடிக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின்மூலமாக செய்யப்படும் வேலைகளை முற்றிலும் நிறுத்திவிட்டு அந்த வேலைகளை நாட்டில் சிறப்பாக உள்கட்டமைப்பு பணிகளை செய்துவரும் பெரிய நிறுவனங்கள் மூலமாய் செய்துமுடிப்பதும், அரசின் திட்டங்களில் இவர்களின் தலையீடு இல்லாமல் செயல்படுத்துவதும் மட்டும்தான் இவர்களின் கொள்ளையை தாண்டி பலனை கொடுக்கும், இல்லையென்றால் இன்னும் நூறாண்டுகளானாலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X