மோடி அரசில் பாரபட்சத்திற்கு இடமில்லை : நிர்மலா சீதாராமன் உறுதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடி அரசில் பாரபட்சத்திற்கு இடமில்லை : நிர்மலா சீதாராமன் உறுதி

Added : செப் 13, 2021 | கருத்துகள் (2)
Share
அருப்புக்கோட்டை : ''வளர்ச்சி பணிகளுக்குநிதியுதவி ஒதுக்குவதில்பாரபட்சம் என்ற வார்த்தைக்கு மோடி அரசில் இடமே கிடையாது'' என அருப்புக்கோட்டையில் நடந்த வங்கி அதிகாரிகள் கலந்தாலோசனைக்கு பிறகு மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பின்தங்கிய மாவட்டங்களை கண்டறிந்து அதை மேம்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி விருதுநகர்அருப்புக்கோட்டை : ''வளர்ச்சி பணிகளுக்குநிதியுதவி ஒதுக்குவதில்பாரபட்சம் என்ற வார்த்தைக்கு மோடி அரசில் இடமே கிடையாது'' என அருப்புக்கோட்டையில் நடந்த வங்கி அதிகாரிகள் கலந்தாலோசனைக்கு பிறகு மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:

பின்தங்கிய மாவட்டங்களை கண்டறிந்து அதை மேம்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மூன்று முறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தேன்.அதன் தொடர்ச்சியாகபல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மாவட்டத்தில் மூன்று அம்சங்களில் இன்னும் பணிகளை முடுக்கி விட அறிவுறுத்தியிருக்கிறேன்.

விருதுநகர் தண்ணீர் பற்றாக்குறையுள்ள மாவட்டம். வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க திட்டமிட்டு இந்தாண்டு முடிந்தவரை செயல்படுத்தப்படும்.தொழிலாளர்கள் நிறைந்த இந்த மாவட்டத்தில் அடல் பென்சன் யோஜனா திட்டம் நல்ல முறையில் செயல்படுகிறது. சிறு, குறுந்தொழில் செய்பவர்களுக்கு தேவையான கடனுதவி வழங்கப்படும். இம்மாவட்டத்தை மேம்படுத்துவதற்கு மார்ச் 2022க்குள் 'இ-நாம்' திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் விவசாயிகள் ஆன்லைன் மூலம் விளைபொருட்களை இந்தியாவின் எந்த பகுதியிலும் விற்க முடியும்.

கால்நடைகள் இங்கு அதிகமாக உள்ளதால் நடமாடும் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும். எல்லோரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு கொடுத்தால் இந்த மாவட்டம் வளர்ச்சியை எட்ட முடியும்.சிவகாசி பட்டாசு பிரச்னை குறித்து பட்டாசு தொழிலதிபர்கள் என்னிடமோ மத்திய அமைச்சரிடமோ மனு கொடுத்தால் பரிசீலிக்கப்படும்.

துறைமுகங்களில் ரெய்டு நடத்தி சீன பட்டாசுகளை தடுத்து நிறுத்தியுள்ளோம். காங்., ஆட்சியில் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தான் புதுடில்லி ரயில்வே நிலையம் தனியாருக்கு வழங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது குறித்த சிதம்பரம் குற்றச்சாட்டுக்கு துாங்குபவர்களை எழுப்பலாம். துாங்குவது போல நடிப்பவர்களை எழுப்பலாகாது.

மதுரை - துாத்துக்குடி இரட்டை அகல ரயில்பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் இருப்பதாக கூறுவோர் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். எல்லா வளர்ச்சி பணிகளுக்கும் சமமாக நிதி வழங்கப்படுகிறது. பாரபட்சம் என்ற வார்த்தைக்கு மோடி அரசில் இடமில்லை. ஜி.எஸ்.டி. கவுன்சில் மத்திய அரசை கேட்டுக் கொண்டால் அதன் வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படும். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய ஒரே இயக்கமாக பா.ஜ., உள்ளது என்றார்.

மத்திய இணை அமைச்சர் முருகன், வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர்.

தலைமை செயலர் தகவல் தெரிவிக்கவில்லை

கூட்டத்திற்கு வருவதற்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என விருதுநகர் காங்., எம்.பி.,மாணிக்கம் தாகூர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுஇருந்தார். அதுகுறித்து கேட்டதற்கு விருதுநகர் ஆய்வுகூட்டம் குறித்து செப்.,8ம் தேதியே தமிழக தலைமை செயலர் இறையன்புக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. அவர் தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இது அவர் பொறுப்பு. இதில் எங்களது தவறு இல்லை என்றார் நிதியமைச்சர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X