ஞாயிறுக்கும் திங்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை: ராகுல் விமர்சனம்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
புதுடில்லி: 'வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைக்கும், வேலை நாட்களான திங்கட் கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான், மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி' என, ராகுல் விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில், போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது

புதுடில்லி: 'வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைக்கும், வேலை நாட்களான திங்கட் கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான், மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி' என, ராகுல் விமர்சித்துள்ளார்.



latest tamil news



காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில், போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது பற்றிய செய்தியை வெளியிட்டார். இந்த முடிவால் 4,000 சிறு நிறுவனங்கள் மூடப்படும் என்று தொழில்துறையினர் கூறியிருப்பது அச்செய்தியில் இடம்பெற்றுள்ளது.


latest tamil news



ராகுல் அந்த பதிவில், 'வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைக்கும், வேலை நாட்களான திங்கட் கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான், மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி. வேலையே இல்லாதபோது, அது ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் என்ன? திங்கட் கிழமையாக இருந்தால் என்ன?' என, விமர்சித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
14-செப்-202100:17:24 IST Report Abuse
Aarkay இது அந்த நிறுவனத்தின் முடிவு. உலகிலுள்ள அந்நிறுவனத்தின் மற்ற ஆலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் மூடி வருகின்றனர். இதற்கும் மோடிஜியிற்கும் என்ன சம்பந்தம்? பட்டாயாவோ, வெநீசுலாவோ சென்று சற்று சூட்டை தனித்துக்கொண்டு வரவும். எங்களுக்கும் கொஞ்ச நாள் உளறல்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.
Rate this:
Cancel
Susil Kumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-செப்-202122:51:53 IST Report Abuse
Susil Kumar இங்கிருக்கும் மடயர்களுக்கு இந்தியனுக்கும், இத்தாலியனுக்குமே வித்தியாசம் தெரியல , இதை யார்கிட்ட சொல்ல.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
13-செப்-202120:41:04 IST Report Abuse
Rajas நாட்டில் ஏதாவது ஒரு மூலையில் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் என்று சொல்லி பாருங்கள். மொத்த மத்திய மந்திரிசபைக்கும் நேரம் காலமே தெரியாது. அதே மக்களின் துயரங்கள், பிரச்சினைகள், பொருளாதார பிரச்சினை என்று சொல்லி பாருங்கள் எல்லா நாளுமே அவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை தான்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
14-செப்-202122:36:18 IST Report Abuse
Aarkayமாப்பிளே இருக்கும் ராவுளுக்கு நாளும், கிழமையும் எப்படி தெரியும்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X