ஞாயிறுக்கும் திங்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை: ராகுல் விமர்சனம்| Dinamalar

ஞாயிறுக்கும் திங்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை: ராகுல் விமர்சனம்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (43)
Share
புதுடில்லி: 'வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைக்கும், வேலை நாட்களான திங்கட் கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான், மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி' என, ராகுல் விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில், போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது

புதுடில்லி: 'வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைக்கும், வேலை நாட்களான திங்கட் கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான், மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி' என, ராகுல் விமர்சித்துள்ளார்.



latest tamil news



காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில், போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது பற்றிய செய்தியை வெளியிட்டார். இந்த முடிவால் 4,000 சிறு நிறுவனங்கள் மூடப்படும் என்று தொழில்துறையினர் கூறியிருப்பது அச்செய்தியில் இடம்பெற்றுள்ளது.


latest tamil news



ராகுல் அந்த பதிவில், 'வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைக்கும், வேலை நாட்களான திங்கட் கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான், மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி. வேலையே இல்லாதபோது, அது ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் என்ன? திங்கட் கிழமையாக இருந்தால் என்ன?' என, விமர்சித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X