பொது செய்தி

இந்தியா

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால் போதும்; தொற்றை கண்டறியலாம்!

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: 'கோவிட் தொற்றைக் கண்டறிய உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து பரிசோதனை செய்யும் முறையை, ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் அதிகளவில் அமல்படுத்த வேண்டும்' என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்

புதுடில்லி: 'கோவிட் தொற்றைக் கண்டறிய உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து பரிசோதனை செய்யும் முறையை, ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் அதிகளவில் அமல்படுத்த வேண்டும்' என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.



latest tamil news



இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்இஇஆர்ஐ) செயல்படுகிறது. இது, கோவிட் மாதிரிகளை பரிசோதிக்கும், உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறையை கண்டறிந்துள்ளது. எளிதான, வேகமான, குறைந்த கட்டணத்திலான இந்தத் தொழில்நுட்பம், நோயாளிகளுக்கு உகந்த வகையில் இருப்பதுடன் முடிவுகள் உடனடியாகவும் கிடைக்கும்.


latest tamil news



இந்த புதிய கண்டுபிடிப்பின் செய்முறை நுண்ணறிவை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. இதனால் இந்தக் கண்டுபிடிப்பு வணிக ரீதியானதாக மாறுவதுடன், தனியார், அரசு மற்றும் பல்வேறு ஊரக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் துறைகளை உள்ளடக்கிய துறையினரிடம் உரிமம் வழங்கப்படும்.


latest tamil news


இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், 'உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறையை, நாடுமுழுவதும், குறிப்பாக, வளங்கள் குறைந்த ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் விரைவான மற்றும் மக்களுக்கு உகந்த வகையில் பரிசோதனைகள் செய்யப்படுவதுடன் தொற்றுக்கு எதிரான நமது போராட்டமும் வலுப்பெறும்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
13-செப்-202114:22:16 IST Report Abuse
 N.Purushothaman வாழ்த்துக்கள் ......ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பில் குறிப்பிடத்தக்க அளவில் இந்தியா இந்த ஏழு ஆண்டு கால ஆட்சியில் முன்னேறி வருவது நேர்மையான ஆளுமையின் அடையாளம் .....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
13-செப்-202114:06:27 IST Report Abuse
M  Ramachandran ஒரு ஜோசியர் கூறியதாவது. இந்த கொராணா விற்கு இந்தியாவில் மருந்து கண்டுபிடிக்கும் இந்திய ஆராய்ச்சியில் பல புது புது மருந்துகள் கண்டுபிடிப்பிற்கு புற்று நோய் உள்பட பல வியாதிகளுக்கு வேறு நோய்களுக்கு தீர்வு காணும் என்று.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-செப்-202113:32:07 IST Report Abuse
Ramesh Sargam ஒரு நல்ல முயற்சி. வரவேட்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X