போட்டித் தேர்வுகள்: தமிழ் பாடத்தாள் கட்டாயம், பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்வு

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (48) | |
Advertisement
சென்னை: அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் எனவும், பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.மனிதவள மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவரின் அறிவிப்புகள்:*
Tamilnadu, Govt Exams, Tamil, Paper, Mandatory, Minister, PTR, தமிழகம், அரசு, பணியிடங்கள், போட்டித்தேர்வு, தமிழ், பாடத்தாள், கட்டாயம், அமைச்சர், பிடிஆர், பழனிவேல்

சென்னை: அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் எனவும், பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மனிதவள மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவரின் அறிவிப்புகள்:

* தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படும்.
* அரசுத்துறைகளில் 100 சதவீதம் தமிழக இளைஞர்கள் நியமனம் செய்ய, தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும்.


latest tamil news



* வேலை வாய்ப்பகம் வழியாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை .
* கொரோனாவால் அரசுப் போட்டித்தேர்வுகள் தாமதமானதால் போட்டித்தேர்வுகளில் நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும்.
* பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்.
* தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-செப்-202121:44:21 IST Report Abuse
Kasimani Baskaran ஹனிமூன் காலத்தில் திமுக ஒரே ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறது. பாராட்டுகள். தாய்மொழியில் ஒருவருக்கு பாண்டித்தியம் இல்லை என்றால் ஒழுங்காக ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு தெளிவாக விளக்கக்கூட முடியாது. இது சம்ச்சீருக்கு நேர் எதிரானது.
Rate this:
Cancel
Barani - Chennai,இந்தியா
13-செப்-202121:28:43 IST Report Abuse
Barani அமைச்சராக தமிழ் எழுத்துத் தேர்வு மற்றும் பேச்சுத் தேர்விருந்தால் ?
Rate this:
Cancel
Krish - Bengalooru,இந்தியா
13-செப்-202120:24:07 IST Report Abuse
Krish எப்படி தமிழ் படித்தவர்கள்தான் அரசாங்க வேலை கொடுக்க வேண்டுமா , அதேபோல் தமிழை தாய் மொழியாக [ வீட்டில் பேசுவதும் தமிழ் ] கொண்டவர்களே 'முதல்வராக வேண்டும் இதே தான் சீமான் அவர்கள் சொல்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X