அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வில் விலக்கு பெற சட்ட போராட்டம் நடத்த வேண்டும்: பாலகிருஷ்ணன்

Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக மாணவ மாணவியரின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு 50 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை, 69 சதவீதமாக உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது. அதைப்போலவே நீட் தேர்வுக்கு, தமிழகத்திற்கு விலக்கு பெற சட்ட

திருப்பூர்: திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக மாணவ மாணவியரின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு 50 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை, 69 சதவீதமாக உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது. அதைப்போலவே நீட் தேர்வுக்கு, தமிழகத்திற்கு விலக்கு பெற சட்ட போராட்டம் நடத்த வேண்டும்.

அதிமுக ஆட்சியில் இருந்தபொழுது நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் முறையாக நடக்கவில்லை. இது குறித்து சரியாக தெரிந்து கொள்ளாத எச்.ராஜா அரைவேக்காட்டுத் தனமாக பேசிக் கொண்டிருக்கக் கூடாது. நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டிய அதிமுக அரசு, அப்போது மத்திய அரசின் கிடுக்கிப் பிடியில் சிக்கி இருந்ததால் சரியான நடவடிக்கை எடுக்க இயலவில்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சி எடுத்துள்ளார். அடுத்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
14-செப்-202112:52:33 IST Report Abuse
jayvee அது சரி.. சீன அதிபருக்கு எப்படித்தெரியம். NEET என்பது மத்திய அரசால் அப்போதைய காங்கிரஸ் மற்றும் திமுகவால் கொண்டுவந்த ஒன்று என்று.. அவர் சொன்னாருன்னு இங்க வந்து கூவக்கூடாது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X