நியூயார்க்: அமெரிக்காவில் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலரும் கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக குடியேறுகின்றனர். அதில் இந்தியர்களின் வருகை அதிகமாக உள்ளது.

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற, 'கிரீன் கார்டு' கட்டாயம் என்பதால் இதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அங்கு ஆண்டுதோறும் 1.4 லட்சம் கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் இந்தியர்களால் அங்கு எளிதில் கிரீன் கார்டு பெற முடிவதில்லை. இந்நிலையில், இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கிரீன் கார்டு பெறுவது தொடர்பாக அமெரிக்காவில் புதிய சட்ட மசோதா இயற்றப்பட உள்ளது.

இதுகுறித்து நியூயார்க் குடியேற்ற சட்ட நிறுவனத்தின் தலைவர் சிரஸ் டி மேத்தா கூறுகையில், 'இந்தியர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்ட மசோதாவால், கிரீன் கார்டு பெறுவதில் நிலுவையில் உள்ள இந்திய விண்ணப்பத்தாரர்கள் ரூ.3.80 லட்சம் கூடுதலாக செலுத்தி கிரீன் கார்டு பெற முடியும். எச்1பி விசா வைத்திருப்பவர்களும் தங்களின் வயது வரம்பு முடியும் தருவாயில் இருந்தாலும், அல்லது முடிந்து இருந்தாலும் இந்த புதிய மசோதாவின் கீழ் கூடுதலாக பணம் செலுத்தி கிரீன் கார்டு பெறலாம்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE