7ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: கராத்தே மாஸ்டர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

7ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: கராத்தே மாஸ்டர் கைது

Added : செப் 13, 2021
Share
பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டு அருகே, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய கராத்தே மாஸ்டரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் அகமது, 30. கராத்தே மாஸ்டரான அவரிடம் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கராத்தே பயிற்சி பெற்று வருகின்றனர்.அதே பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 11 வயது

பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டு அருகே, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய கராத்தே மாஸ்டரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் அகமது, 30. கராத்தே மாஸ்டரான அவரிடம் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கராத்தே பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி கடந்த ஜன., மாதம் கராத்தே பயிற்சி பெற தனியாக வந்த போது அவரை கராத்தே மாஸ்டர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், மாணவி ஆறு மாதம் கர்ப்பமானார்.
இதுகுறித்த புகாரின்பேரில், குடியாத்தம் மகளிர் போலீசார் போக்சோவில் பயாஸ் அகமதை இன்று கைது செய்து குடியாத்தம் கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X