சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜன., முதல் செப்.,10 வரை சாலை விபத்துக்களில் 148 பேர் பலி

Added : செப் 13, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் செப்.,10 வரை நடந்த சாலை விபத்துக்களில் 148 பேர் பலியான தகவல் வெளியாகியுள்ளது.வேலுார் மாவட்டத்தில் ஏற்படும் சாலை விபத்துக்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்காக சிக்கனல், வேகத்தடை, தடுப்புக்கள், விபத்துக்கள் நடக்கும் பகுதி என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். ஆனாலும் விபத்துக்கள்

வேலுார்: வேலுார் மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் செப்.,10 வரை நடந்த சாலை விபத்துக்களில் 148 பேர் பலியான தகவல் வெளியாகியுள்ளது.
வேலுார் மாவட்டத்தில் ஏற்படும் சாலை விபத்துக்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்காக சிக்கனல், வேகத்தடை, தடுப்புக்கள், விபத்துக்கள் நடக்கும் பகுதி என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். ஆனாலும் விபத்துக்கள் குறையவில்லை.
இதுகுறித்து வேலுார் மாவட்ட போலீசார் கூறியதாவது: வேலுார் மாவட்டத்தில், கடந்த ஜன மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை நடந்த சாலை விபத்துக்களில் 148 பேர் பலியாகியுள்ளனர். 364 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்தாண்டு இந்த காலக்கட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 45 பேர் மட்டும் பலியாகினர், 378 பேர் படுகாயமடைந்தனர். கடந்தாண்டு கொரோனா ஊரடங்கினால் விபத்துக்கள் குறைவாக நடந்தன. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வினால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X