சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமூக ஆர்வலர் கொலை; வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்?

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாணியம்பாடி: கஞ்சா வியாபாரியை முன் கூட்டியே கைது செய்யாத வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டராக கோவிந்தசாமி பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 26 ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி இம்தீயாஷ் என்பவர் உடற் பயிற்சிக்கூடத்தில் இருந்து எட்டு கிலோ கஞ்சா, 10 பட்டா கத்திகள், 10
சமூக ஆர்வலர் கொலை; வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்?

வாணியம்பாடி: கஞ்சா வியாபாரியை முன் கூட்டியே கைது செய்யாத வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டராக கோவிந்தசாமி பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 26 ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி இம்தீயாஷ் என்பவர் உடற் பயிற்சிக்கூடத்தில் இருந்து எட்டு கிலோ கஞ்சா, 10 பட்டா கத்திகள், 10 மொபைல் போன்கள் பறிமுதல் செய்து, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான இம்தீயாஷ் மீது வழக்கு பதிவு செய்திருந்தாலும் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளரான வசீம் அக்ரம், 40, கடந்த 10ம் தேதி இரவு 7:30 மணிக்கு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சென்னை ஓட்டேரி கூலிப்படையை சேர்ந்த பிரசாந்த் என்கிற ரவி, டில்லிகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கஞ்சா வியாபாரி இம்தீயாஷ் குறித்து போலீசாருக்கு அடிக்கடி தகவல்கள் சொன்னார். இதனால் இம்தீயாஷ் ஏற்பாட்டின் பேரில், வசீம் அக்ரத்தை கொலை செய்ததும், இதற்காக 25 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதும் தெரியவந்தது. கஞ்சா வியாபாரி இம்தீயாஷ்சை கைது செய்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

வேலுார் சரக டி.ஐ.ஜி., பாபு நடத்திய விசாரணையில், கஞ்சா வியாபாரி இம்தியாஷ்சை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை, மது பாட்டில், கள்ள சாராயம், ரேஷன் அரிசி கடத்தல் போன்ற விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, 50, இருந்தது தெரியந்தது. இதனால் அவரை சஸ்பெண்ட் செய்து வேலுார் சரக டி.ஐ.ஜி., பாபு உத்தரவிட்டார்.


latest tamil news



எஸ்.பி., மாற்றம்:


சில தினங்களுக்கு முன்பு திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., சிபிச்சக்கரவர்த்தி திடீரென சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய எஸ்.பி., யாக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க தவறியதால் சிபிச்சக்கரவர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.


கருப்பு ஆடு:


கஞ்சா வியாபாரி குறித்து வசீம் அக்ரம் அடிக்கடி வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல்கள் கொடுத்துள்ளார். அந்த தகவல்கள் அடுத்த நிமிடமே கஞ்சா வியாபாரிக்கு தெரிந்துள்ளது. போலீஸ் ஸ்டேஷனிலேயே உள்ள சிலர் பணத்தாசை காரணமாக கஞ்சா வியாபாரிக்கு வசீம் அக்ரம் குறித்து தகவல் கொடுத்து வந்துள்ளனர். அந்த கருப்பு ஆடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


சிறையில் அடைப்பு:


இந்த கொலை வழக்கில் கைதான பிரசாந்த், டில்லிகுமார் ஆகியோர் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பத்துார் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.


டி.எஸ்.பிக்கு நோட்டீஸ்:


கஞ்சா வியாபாரி இம்தியாசை பிடிக்கத் தவறிய வாணிடியம்பாடி டி.எஸ்.பி., பழனிக்கு விளக்கம் கேட்டு வேலுார் சரக டி.ஐ.ஜி., நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
16-செப்-202116:05:53 IST Report Abuse
GANESUN வலைவீசி தேடிவருகின்றனர்....
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
16-செப்-202109:56:15 IST Report Abuse
JeevaKiran இப்போ புரிகிறதா? நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு மூல காரணம் யார் என்று? வெளியே பயிரை மேய்ந்தால்?
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
16-செப்-202107:48:38 IST Report Abuse
suresh kumar கஞ்சா வியாபாரி இம்தியாசை பிடித்துவிட்டார்களா? அது பற்றிய தகவல் இந்த செய்தியில் இல்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X