சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
மகிழ்ச்சி தரும் சுறுசுறுப்புஒவ்வொருவர் வாழ்க்கையும் வித்தியாசமானது. சிலருக்கு நாள்தோறும் வேலை நேரம் போக, ஓய்வு நேரம் அதிகளவில் இருக்கும். சிலருக்கு ஓய்வு நேரம் மிக குறைவாகவே இருக்கும். இதில் அதிக நேரம் ஓய்வில் இருப்பவர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதே பலரின் எண்ணம். ஆனால் இது குறித்த ஆய்வில் ஒரு நாளைக்கு ஓய்வு நேரம் 2 மணி நேரத்துக்கு கீழ் உள்ளவர்களிடம்


மகிழ்ச்சி தரும் சுறுசுறுப்பு



ஒவ்வொருவர் வாழ்க்கையும் வித்தியாசமானது. சிலருக்கு நாள்தோறும் வேலை நேரம் போக, ஓய்வு நேரம் அதிகளவில் இருக்கும். சிலருக்கு ஓய்வு நேரம் மிக குறைவாகவே இருக்கும். இதில் அதிக நேரம் ஓய்வில் இருப்பவர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதே பலரின் எண்ணம். ஆனால் இது குறித்த ஆய்வில் ஒரு நாளைக்கு ஓய்வு நேரம் 2 மணி நேரத்துக்கு கீழ் உள்ளவர்களிடம் மகிழ்ச்சி எண்ணம் அதிகளவில் உள்ளது. அதே நேரம் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஓய்வு நேரத்தை அனுபவிப்பவரிடம் மகிழ்ச்சி எண்ணம் குறைவாகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல் சுரங்கம்




அறிவியல் ஆய்வு மையம்



உத்தரகண்டின் நைனிடால் நகரில் இருந்து 9 கி.மீ. துாரத்தில் மனோரா சிகரத்தில், ஆரியபட்டா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் அப்சர்வேஷன் சயின்ஸ் (ஏ.ஆர்.ஐ.இ.எஸ்.,) ஆய்வு மையம் அமைந்துள்ளது. இது 1954 ஏப்., 20ல் தொடங்கப்பட்டது. இது கடல்மட்டத்தில் இருந்து 6401 அடி உயரத்தில் உள்ளது. இங்கு வானவியல், வான் இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு கோள்கள், நட்சத்திரங்களை தொலைநோக்கி மூலம் காண்பதற்கான வசதி உள்ளது. முன் அனுமதியுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X