அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வின்,'ஹனிமூன்' காலம் முடிந்து விட்டது: பா.ஜ., தமிழக பொறுப்பாளர் ரவி தகவல்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
திருச்சி:பா. ஜ. தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான ரவி, திருச்சியில், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதன் பின், அவர் கூறியதாவது: தி.மு.க.,வின், 'ஹனிமூன்' காலம் முடிந்து விட்டது, கடந்த நான்கு மாதமாக, நிலையான மனநிலையில் இல்லை. மத்திய அரசு, தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை அளித்தாலும், தி.மு.க., அரசு, மத்திய அரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.

திருச்சி:பா. ஜ. தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான ரவி, திருச்சியில், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



latest tamil news




அதன் பின், அவர் கூறியதாவது: தி.மு.க.,வின், 'ஹனிமூன்' காலம் முடிந்து விட்டது, கடந்த நான்கு மாதமாக, நிலையான மனநிலையில் இல்லை. மத்திய அரசு, தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை அளித்தாலும், தி.மு.க., அரசு, மத்திய அரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு, நேர்மறை எண்ணம் இல்லை. மத்திய அரசும், பா.ஜ., கட்சியும், மாநில அரசுகளுக்கு, 100 சதவீதம் ஆதரவு அளித்து வருகிறது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகம் அபாயகரமாக மாறி வருகிறது. முன்னாள் முதல்வர் அண்ணா துரை பிறந்த நாளில், சிறையில் உள்ள குற்றவாளிகள், தீவிரவாதிகள் 700 பேரை விடுதலை செய்யும் அபாயகரமான முடிவுக்கு, பா.ஜ., கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது.
சி.ஏ.ஏ., சட்டம், இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை என்றாலும், தி.மு.க., முஸ்லிம்களுக்கு எதிரானது, என்ற கருத்துக்களை பரப்பி வருகிறது. அதே போல், மூன்று வேளாண் சட்டங்களும் வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கு எதிரானது இல்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும், இது மக்களுக்கு எதிரானது, என்று மிகைப்படுத்தி தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தில், ஏழு லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை மறைக்க முயற்சி செய்யும் தி.மு.க., அரசு, அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அ.தி.மு.க., பா.ம.க.,வுடன் கூட்டணியில் இருக்கிறோம். தமிழ் மக்களுடன், எப்பொழுதும் இருப்போம்.


latest tamil news




உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., போட்டி


உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ., கட்சி போட்டியிடும். அதற்கான கூட்டணி குறித்து, கட்சித் தலைமை முடிவு எடுக்கும். கட்சியை பலப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.1962ல் இருந்த இந்தியா, இப்போது இல்லை. 2021ல் உள்ளது. இந்தியா தனியாக இல்லை; பல நாடுகளுடன் நட்புறவு கொண்டு உள்ளது. எந்த நிலையையும் சந்திக்கத் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shan - sydney,ஆஸ்திரேலியா
14-செப்-202108:10:13 IST Report Abuse
shan இவருக்கு கர்நாடகாவில் முதல் அமைச்சர் பதவி கிடடைக்கவில்லை , அதனுடைய கோவத்தை தமிழ் நாட்டில் காண்பிக்கிறார் , மெகா டாத அநை விவகாரம் என்ன ஆனது ?
Rate this:
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
14-செப்-202106:59:17 IST Report Abuse
Padmanaban Jayakrishnan இந்தியா முழுக்க இருக்கும் ஆளுநர் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் வசதிகள் , அங்கே பணிபுரியும் பணியாளர்களின் சம்பளம் , வாடகை , பெட்ரோல் , இதர வசதிகள் இவைகளால் மட்டுமே ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாதம் பல கோடிகளில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மக்களால் தெரிவு செய்யப்படும் நபர்களும் அல்ல. மக்களால் தேர்தல்களில் புறக்கணிக்கப்பட்ட கட்சிக்கார்களே இந்த பதவிகளை அனுபவிக்கிறார்கள். கேலிக்கூத்து
Rate this:
Cancel
14-செப்-202102:22:06 IST Report Abuse
அப்புசாமி ஒரு பெரியவர் எட்டு வருஷமா ஒன்றிய ஹனிமூன் ல இருக்காரு. பாஞ்சி லட்சமும் வரல. ரெண்டு கோடி வேலை வாய்ப்பும் வரலை. இதோ சொகுசு விமானத்துல அமெரிக்கா போய்க்கிட்டே இருக்காரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X