பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்: 97,139 பேருக்கு ஊசி போடப்பட்டது

Added : செப் 13, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம், 847 மையங்களில் நடந்தது. இதில், ?,??? பணியாளர்கள் ஈடுபட்டனர். காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை பணி தொடர்ந்தது. சில மையங்களில் காலையில் மட்டும் வரிசை காணப்பட்டது. பெரும்பாலான மையங்களில் காத்திருக்காமல் சில நிமிடங்களில் ஊசி போட்டு சென்றனர். மாவட்ட கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு மற்றும்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம், 847 மையங்களில் நடந்தது. இதில், ?,??? பணியாளர்கள் ஈடுபட்டனர். காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை பணி தொடர்ந்தது. சில மையங்களில் காலையில் மட்டும் வரிசை காணப்பட்டது. பெரும்பாலான மையங்களில் காத்திருக்காமல் சில நிமிடங்களில் ஊசி போட்டு சென்றனர். மாவட்ட கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர், மையங்களில் ஆய்வில் ஈடுபட்டனர்.


துணிக்கடையில் தள்ளுபடி : மாநகராட்சியில் நேற்று நடந்த முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, ஈரோடு ஆர்.கே.வி., சாலையில் உள்ள சென்னை சில்க்ஸில், 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது.

97,139 'டோஸ்': மாவட்டத்தில் நேற்று நடந்த, மெகா தடுப்பூசி முகாமில், 1.05 லட்சம் பேருக்கு, தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 97 ஆயிரத்து, 139 பேருக்கு ஊசி போடப்பட்டதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் மாநகராட்சி அளவில், 16 ஆயிரத்து, 315 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X