சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

விடிவு எப்போது?

Added : செப் 13, 2021
Share
Advertisement
விடிவு எப்போது?'நேர்மையான அதிகாரிகளை அவமானப்படுத்தும் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த ஏதாவது சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை இப்படித் தான் அவமானப்பட்டு நிற்க வேண்டும்' என கண்ணீர் வடிக்கின்றனர், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள். இங்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மைசூரு மாநகராட்சியின் துணை கமிஷனராக இருந்த ரோகிணி

அக்கம் பக்கம்


விடிவு எப்போது?



'நேர்மையான அதிகாரிகளை அவமானப்படுத்தும் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த ஏதாவது சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை இப்படித் தான் அவமானப்பட்டு நிற்க வேண்டும்' என கண்ணீர் வடிக்கின்றனர், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள். இங்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மைசூரு மாநகராட்சியின் துணை கமிஷனராக இருந்த ரோகிணி சிந்துாரி, நேர்மையான அதிகாரி. மக்களிடம் பாராட்டு பெற்றவர். இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு இவரைப் பிடிக்கவே பிடிக்காது. மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,வான எஸ்.ஆர்.மகேஷுக்கும் ரோகிணிக்கும் ஏழாம் பொருத்தம். பல்வேறு விஷயங்களில் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

'ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அரசு பங்களா அவசியமில்லை. எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தான் அரசு பங்களாவை கொடுக்க வேண்டும்' என ரோகிணியை மறைமுகமாக சாடினார். மைசூரு எம்.பி.,யான பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா, 'அதிகாரிகளுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர் பட்டாளம் உள்ளது. அது போன்ற சமூக வலைதளங்களை முடக்க வேண்டும். அவர்களுக்கு எதற்கு ரசிகர் மன்றம்?' என தன் பங்கிற்கு எகிறினார். இதைக் கேட்ட சக அதிகாரிகள் கொந்தளித்தனர். 'ஊழலுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது புழுதி வாரி துாற்றுவதே அரசியல்வாதிகளுக்கு வேலையாகி விட்டது; இதற்கு விடிவு ஏற்படுவது எப்போது?' என ஆவேசப்படுகின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X