சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அந்தியூர் பஸ் டிப்போவில் மயங்கிய தொழிலாளி சாவு

Added : செப் 13, 2021
Share
Advertisement
அந்தியூர்: கோபி அருகேயுள்ள பொலவகாளிபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன், 55; ஆறு ஆண்டாக அந்தியூர் அரசு பஸ் டிப்போவில் தினக்கூலியாக பஸ் கிளீனிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு வந்தார். இந்நிலையில் நேற்று காலை கழிவறையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

அந்தியூர்: கோபி அருகேயுள்ள பொலவகாளிபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன், 55; ஆறு ஆண்டாக அந்தியூர் அரசு பஸ் டிப்போவில் தினக்கூலியாக பஸ் கிளீனிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு வந்தார். இந்நிலையில் நேற்று காலை கழிவறையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இரண்டு மாதமாக உடல் நிலை பாதித்திருந்தார். இந்நிலையில் வேலைக்கு வந்தபோது, உடல்நலம் பாதித்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X