சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'கண்டிப்பாக இப்போதைய தமிழக கம்யூனிஸ்ட்டாக இருந்திருக்க மாட்டார்; தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்திருக்க மாட்டார்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: இளம் வயதிலேயே காலமாகி விட்ட பாரதி, ஒருவேளை நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் முழுமையான இடதுசாரி சிந்தனையாளராக பரிணமித்திருப்பார்.'அப்படி இருக்காது. தமிழக அரசியல் தலைவர்கள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

'கண்டிப்பாக இப்போதைய தமிழக கம்யூனிஸ்ட்டாக இருந்திருக்க மாட்டார்; தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்திருக்க மாட்டார்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: இளம் வயதிலேயே காலமாகி விட்ட பாரதி, ஒருவேளை நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் முழுமையான இடதுசாரி சிந்தனையாளராக பரிணமித்திருப்பார்.


'அப்படி இருக்காது. தமிழக அரசியல் தலைவர்கள் எப்போதைக்கு, 'நீட்' அரசியலை கைவிடப் போகின்றனரோ என எண்ணி அந்த தவறான முடிவை எடுத்திருப்பாரோ...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
'நீட்' தேர்வு அச்சத்தால் தம்பி தனுஷ் தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட துயரம் தாளவியலாத கொடுமை. ஏற்கனவே இருமுறை தேர்ச்சிப் பெற்றும் மருத்துவம் பயில இடம் கிட்டவில்லை.


இம்முறையும் இடம் கிடைக்காமல் போனால் என்ன செய்வதென்று அஞ்சி, கூடுதல் மனஅழுத்தத்திற்கு ஆளாகி பலியாகியிருக்கிறான்.'இத்தனை காலமாக இதை மறந்தது ஏனோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை:
மகாகவி பாரதி பிறந்த நாளை, ஜாதிகள் ஒழிப்பு நாளாக, அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் உறுதி மொழி எடுக்க உத்தரவிட வேண்டும்.


'இப்போது மட்டுமில்லை; எப்போதுமே முன்னுக்கு பின் முரண் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில் தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு இலங்கையும், அங்கு வாழும் தமிழர்களையும் சேர்க்க வேண்டும்' என அக்கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், முன்னுக்கு பின் முரணாக, அச்சட்டத்தை நீக்க வேண்டும் என இப்போது தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


'ஆறு லட்சம் கோடியை திரட்டி, பா.ஜ., கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்தப் போவதில்லை; நாட்டின் வளர்ச்சிக்குத் தானே பயன்படுத்த போகிறது...' என, கேட்கத் தோன்றும் வகையில், எஸ்.ஆர்.எம்.யு., தொழிற்சங்கத் தலைவர் கண்ணையா பேட்டி:
நாட்டின் சொத்தாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் சிலவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு, ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-202101:39:19 IST Report Abuse
மோகனசுந்தரம் நீட் ஐ பற்றி என்னதான் புரிந்து வைத்துள்ளர்களோ. கடந்த 10வருடங்களில் அரசு பள்ளியில் படித்த 245 மாணவர்கள் மெடிக்கலில் சேர்த்துள்ளனர். ஆனால் நீட் வந்த ஒரு வருடத்தில் 415 அரசு பள்ளி மாணவர்கள் சேர்த்துள்ளனர். நீட்டால் இவ்வளவு நன்மை இருக்கும் போது இதை எதிர்ப்பவர்களை எதனால அடிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X