சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அர்ச்சகர் வீட்டில் அதிகாலையில் கொள்ளை: பவானிசாகரில் கும்பல் கைவரிசை

Added : செப் 13, 2021
Share
Advertisement
பவானிசாகர்: பவானிசாகரில், அர்ச்சகர் வீட்டில் அதிகாலையில் புகுந்த மூன்று பேர் கும்பல், நகை, பணத்தை கொள்ளை யடித்து சென்றது.பவானிசாகர் ஓ.எம். குடியிருப்பில் வசிப்பவர் ராமசுப்பிரமணியம், 56; வேல்விநாயகர் கோவில் அர்ச்சகர். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு வழக்கம்போல் ராமசுப்பிரமணியம் கோவிலுக்கு சென்று விட்டார். உறவினர் ஹரிஹரன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது

பவானிசாகர்: பவானிசாகரில், அர்ச்சகர் வீட்டில் அதிகாலையில் புகுந்த மூன்று பேர் கும்பல், நகை, பணத்தை கொள்ளை யடித்து சென்றது.


பவானிசாகர் ஓ.எம். குடியிருப்பில் வசிப்பவர் ராமசுப்பிரமணியம், 56; வேல்விநாயகர் கோவில் அர்ச்சகர். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு வழக்கம்போல் ராமசுப்பிரமணியம் கோவிலுக்கு சென்று விட்டார். உறவினர் ஹரிஹரன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் மூவர், பீரோவில் இருந்த நான்கே கால் பவுன் தங்க நகை, 80 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றனர். சத்தம் கேட்டு எழுந்த ஹரிஹரன் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் துரத்தி சென்றும் ஆசாமிகளை பிடிக்க முடியவில்லை. பவானிசாகர் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதிகாலையில் அர்ச்சகர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பவானிசாகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X