பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 13, 2021
Share
Advertisement
செப்., 14, 1927ஈரோடு அருகில் உள்ள ஊஞ்சலுாரில் 1927 செப்., 14ம் தேதி பிறந்தவர் யூ.ஆர்.ஜீவரத்தினம். தன் 9வது வயதில், சென்னை கிருஷ்ணையா நாடக கம்பெனியில் சேர்ந்தார். கைலாச பாகவதர், குன்னக்குடி வெங்கட்ராமையர் போன்றோரிடம் இசை பயிற்சி பெற்றார். கடந்த 1937ல், 'மாடர்ன் தியேட்டர்ஸ்' தயாரித்த சதி அகல்யா படத்தில் பாடகியாகவும், சிறு வேடத்திலும் நடித்தார். 'பக்த கவுரி, கண்ணகி, வால்மீகி,
 இதே நாளில் அன்று


செப்., 14, 1927

ஈரோடு அருகில் உள்ள ஊஞ்சலுாரில் 1927 செப்., 14ம் தேதி பிறந்தவர் யூ.ஆர்.ஜீவரத்தினம். தன் 9வது வயதில், சென்னை கிருஷ்ணையா நாடக கம்பெனியில் சேர்ந்தார். கைலாச பாகவதர், குன்னக்குடி வெங்கட்ராமையர் போன்றோரிடம் இசை பயிற்சி பெற்றார். கடந்த 1937ல், 'மாடர்ன் தியேட்டர்ஸ்' தயாரித்த சதி அகல்யா படத்தில் பாடகியாகவும், சிறு வேடத்திலும் நடித்தார். 'பக்த கவுரி, கண்ணகி, வால்மீகி, ஸ்ரீ முருகன்' உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.இவர் பாடிய, 'தெருவில் வாராண்டி வேலன், மாநில மீதினில் ஜீவர்கள் வாழும் வாழ்விது நாடகமாகும்...' உள்ளிட்ட பல பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. 'மெர்க்குரி பிலிம்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, சில படங்களை தயாரித்தார். அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பொருளாதார பின்னடைவை சந்தித்தார். 2000 ஜூலை 26ம் தேதி தன் 72வது வயதில் காலமானார்.'இசைக்குயில்' யூ.ஆர்.ஜீவரத்தினம் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X