பொது செய்தி

தமிழ்நாடு

15 ஆயிரம் ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடி

Added : செப் 13, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் வசந்தரேகா கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட மாவட்டம். இங்கு கத்தரி, வெண்டை, தக்காளி, முருங்கை உள்ளிட்ட காய்கறி வகைளை, விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். மேலும், சாமந்தி, சம்பங்கி, ரோஜா, பட்டன்ரோஸ் உள்ளிட்ட பூக்கள் மற்றும் துவரை, நிலக்கடலை, கொண்டக்கடலை உள்ளிட்ட, பருப்பு வகைகளையும்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் வசந்தரேகா கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட மாவட்டம். இங்கு கத்தரி, வெண்டை, தக்காளி, முருங்கை உள்ளிட்ட காய்கறி வகைளை, விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். மேலும், சாமந்தி, சம்பங்கி, ரோஜா, பட்டன்ரோஸ் உள்ளிட்ட பூக்கள் மற்றும் துவரை, நிலக்கடலை, கொண்டக்கடலை உள்ளிட்ட, பருப்பு வகைகளையும் சாகுபடி செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தற்போது, தொடர்ந்து மழை பெய்வதால், பயறு வகைகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி, கடந்தாண்டு, 14 ஆயிரத்து, 300 ஹெக்டேர் நிலக்கடலை சாகுபடி செய்த நிலையில் நடப்பாண்டில், 500 ஹெக்டேர் சாகுபடி அதிகரித்து, 14 ஆயிரத்து, 800 ஹெக்டேரில் நிலக்கடலையை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தொடர் மழையால், இச்செடிகள் செழித்து வளர்வதால், அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X