நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்; விபத்து ஏற்படுவதாக மக்கள் புகார்

Added : செப் 13, 2021
Share
Advertisement
அரூர்: அரூரில், பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, கச்சேரிமேடு, நான்குரோடு, திரு.வி.க.நகர், பாட்சாபேட்டை உள்ளிட்ட இடங்களில், வணிக நிறுவனங்கள், ஜவுளி, நகை, மொபைல், மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இவற்றின் விளம்பர பலகைகள் சாலையை ஆக்கிரமித்து நடப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் கடைகளும் கட்டப்பட்டுள்ளன. மேலும், கடைகளின் முன், சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால்,

அரூர்: அரூரில், பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, கச்சேரிமேடு, நான்குரோடு, திரு.வி.க.நகர், பாட்சாபேட்டை உள்ளிட்ட இடங்களில், வணிக நிறுவனங்கள், ஜவுளி, நகை, மொபைல், மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இவற்றின் விளம்பர பலகைகள் சாலையை ஆக்கிரமித்து நடப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் கடைகளும் கட்டப்பட்டுள்ளன. மேலும், கடைகளின் முன், சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, பல முறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X