சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் கலப்பையில் சிக்கி விவசாயி பலி

Added : செப் 13, 2021
Share
Advertisement
ஓசூர்: பேரிகை அடுத்த குள்ளுவை சேர்ந்தவர் சொன்னேப்பள்ளியப்பா, 55. விவசாயி; இவர் கடந்த, 10ல் காலை, அங்குள்ள நிலத்தில், டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். டிராக்டர் ரொட்டேட்டர் கலப்பையில் புற்கள் அதிகமாக சிக்கியதால், கீழே இறங்கி இடது காலால் புற்களை அகற்றினார். அப்போது ரொட்டேட்டரில் சிக்கி இடது கால் நசுங்கியது. அதிகளவு ரத்தம் வெளியேறிய நிலையில், அவரது

ஓசூர்: பேரிகை அடுத்த குள்ளுவை சேர்ந்தவர் சொன்னேப்பள்ளியப்பா, 55. விவசாயி; இவர் கடந்த, 10ல் காலை, அங்குள்ள நிலத்தில், டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். டிராக்டர் ரொட்டேட்டர் கலப்பையில் புற்கள் அதிகமாக சிக்கியதால், கீழே இறங்கி இடது காலால் புற்களை அகற்றினார். அப்போது ரொட்டேட்டரில் சிக்கி இடது கால் நசுங்கியது. அதிகளவு ரத்தம் வெளியேறிய நிலையில், அவரது உறவினர்கள் மீட்டு, கர்நாடகா மாநிலம், கோலாரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். பேரிகை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X