சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக், மொபைல் திருடனை துரத்திப்பிடித்த போலீஸ்

Added : செப் 13, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ராஜஸ்தான் மாநிலம், துக்கோலியை சேர்ந்த ஜெயராம், 27, பர்கூர் அருகே கொண்டப்ப நாயனப்பள்ளியில் தங்கி, கிரானைட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த, 9ல் அவர் பணியாற்றும் கிரானைட் நிறுவனத்துக்கு வந்த வாலிபர், கிரானைட் கற்கள் குறித்து பேசி அவரது டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கை நைசாக திருடிச்சென்றார். இதுகுறித்து ஜெயராம் கந்திக்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

கிருஷ்ணகிரி: ராஜஸ்தான் மாநிலம், துக்கோலியை சேர்ந்த ஜெயராம், 27, பர்கூர் அருகே கொண்டப்ப நாயனப்பள்ளியில் தங்கி, கிரானைட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த, 9ல் அவர் பணியாற்றும் கிரானைட் நிறுவனத்துக்கு வந்த வாலிபர், கிரானைட் கற்கள் குறித்து பேசி அவரது டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கை நைசாக திருடிச்சென்றார். இதுகுறித்து ஜெயராம் கந்திக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். இதேபோல, கிருஷ்ணகிரி, சேலம் ரோட்டை சேர்ந்தவர் சனாவுல்லா, 50; கடந்த, 11ல் அதேபகுதி பணக்கார தெருவிலுள்ள டீக்கடைக்கு சென்றவர், தன் மொபைல் போனை அருகில் வைத்துவிட்டு பேசி கொண்டிருந்தபோது, வாலிபர் ஒருவர், மொபைல்போனை திருடினார். சனாவுல்லா, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகாரளித்தார். போலீசார் கடந்த, 11ல் கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கில் வந்த வாலிபரை நிறுத்த முயன்றனர். பைக்கை நிறுத்தாமல் தப்பிய வாலிபரை போலீசார் துரத்திப்பிடித்தனர். விசாரணையில் அவர் சூளகிரி அடுத்த பீர்பள்ளியை சேர்ந்த சங்கர், 24 என்பதும், பைக், மொபைல்போனை திருடியதும் தெரிந்து, அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X