குடிநீருக்கு தூக்கம் தொலைத்த பெண்கள்

Added : செப் 13, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியிலுள்ள, 33 வார்டுகளுக்கு நகராட்சி மூலம், தென்பெண்ணை ஆற்றில் இருந்தும், ஒகேனக்கல் கூட்டு குடிநீரும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் வினியோகமும் செய்யப்படுகிறது.நகராட்சி பணியாளர்கள் குடிநீர் ஏற்றும் பணிகள் முடிந்தவுடன் இரவு, 2:00 மணியிலிருந்து அதிகாலை, 5:00 மணி வரை எந்த நேரத்திலும் தண்ணீரை திறந்து விடுகின்றனர். தண்ணீர் திறக்க இதுவரை ஒரு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியிலுள்ள, 33 வார்டுகளுக்கு நகராட்சி மூலம், தென்பெண்ணை ஆற்றில் இருந்தும், ஒகேனக்கல் கூட்டு குடிநீரும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் வினியோகமும் செய்யப்படுகிறது.


நகராட்சி பணியாளர்கள் குடிநீர் ஏற்றும் பணிகள் முடிந்தவுடன் இரவு, 2:00 மணியிலிருந்து அதிகாலை, 5:00 மணி வரை எந்த நேரத்திலும் தண்ணீரை திறந்து விடுகின்றனர். தண்ணீர் திறக்க இதுவரை ஒரு குறிப்பிட்ட நேரமும் இல்லை. ஒரு நாள் குடிநீர் பிடிக்காமல் போனால், அடுத்த இரண்டு நாள் நீரின்றி அவதிப்படக்கூடாது என்பதற்காக இரவு, 2:00 மணி முதல் பெண்கள் குடிநீர் பிடிக்க தூக்கத்தை தொலைத்து காத்திருக்கின்றனர். இது குறித்து பெண்கள் கூறுகையில், 'குறிப்பிட்ட நேரத்திற்கு குடிநீர் வினியோகிக்க பலமுறை நகராட்சியில் புகார் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தூக்கம் கெடுவதோடு, உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. பகலில் சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. பல ஆண்டுகளாக இப்பிரச்னை உள்ளதால், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்ய ஒரு குறிப்பிட்ட நேரத்தை அறிவித்து, அந்த நேரத்தில் மட்டும் குடிநீர் வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X