பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூரில் விநாயகர் சிலைகள் கரைப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில் ஒவ்வோர் ஆண்டும், விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, பொது இடங்களில் சிலைகளை வைத்து இந்து அமைப்புகள் பூஜை செய்து, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக, பொது இடத்தில் விநாயகர் சிலைகள் வைக்க அரசு அனுமதி வழங்கவில்லை. அதனால், கோவில்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் சிலைகளை வைத்து வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தி

ஓசூர்: ஓசூரில் ஒவ்வோர் ஆண்டும், விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, பொது இடங்களில் சிலைகளை வைத்து இந்து அமைப்புகள் பூஜை செய்து, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக, பொது இடத்தில் விநாயகர் சிலைகள் வைக்க அரசு அனுமதி வழங்கவில்லை. அதனால், கோவில்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் சிலைகளை வைத்து வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தி முடிந்து, மூன்றாம் நாளான நேற்று, கோவில்கள், வீடுகளில் வைத்திருந்த சிலைகளை மக்கள் நீர்நிலைகளில் கரைத்தனர். ஓசூர் தேர்ப்பேட்டை பச்சைகுளம், தர்கா சந்திராம்பிகை ஏரி, கோபசந்திரம் தென்பெண்ணை ஆறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன. தமிழ்நாடு, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், விநாயர் சிலையை பைக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைத்தனர். அதேபோல், தேன்கனிக்கோட்டை, சூளகிரி சுற்று வட்டார பகுதிகளிலும், விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன.

* ஊத்தங்கரையில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை மக்கள், நகரின் மையப்பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் பூஜை செய்து கரைத்துச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X