பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 776 மையங்களில் தடுப்பூசி முகாம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே, 9.53 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்,'' என, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், 707 இடங்களிலும், 61 அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், ஆறு அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு பள்ளி என மொத்தம், 776

கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே, 9.53 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்,'' என, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், 707 இடங்களிலும், 61 அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், ஆறு அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு பள்ளி என மொத்தம், 776 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. மையங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதி திராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு இணை செயலாளர் பழனிசாமி, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பர்கூர், தி.மு.க.,-எம்.எல்.ஏ., மதியழகன் உடனிருந்தார். பின், கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே, 9.53 லட்சம் பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதில், 7.50 லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.


* ஓசூர் அருகே, பேகேப்பள்ளி மற்றும் பேலகொண்டப்பள்ளி சிறப்பு முகாமை, தி.மு.க.,-எம்.எல்.ஏ., பிரகாஷ், சப்கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


* கிருஷ்ணகிரி நகராட்சி, தர்மராஜா கோவில் சாலையிலுள்ள அங்கன்வாடி மையத்தில் நடந்த முகாமை, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலக கூடுதல் இயக்குனர் அசோகன் மற்றும் சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா ஆய்வு செய்தனர்.


* ஊத்தங்கரையில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குமார் மேற்பார்வையில், 70 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X