பொது செய்தி

தமிழ்நாடு

அடங்க மறுக்கும் ஒற்றை யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு

Added : செப் 13, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து ஐந்து பேரை கொன்ற ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே பச்சப்பனட்டியில், ஒற்றை யானை தாக்கி விவசாயி வெங்கடேசப்பா நேற்று இறந்தார். கடந்த, 10ல், வேப்பனஹள்ளி அருகே இதே ஒற்றை யானை தாக்கி விவசாயிகள் நாகராஜ், சந்திரன் ஆகியோர் பலியாகினர். முன்னதாக அதற்கு சில

கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து ஐந்து பேரை கொன்ற ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே பச்சப்பனட்டியில், ஒற்றை யானை தாக்கி விவசாயி வெங்கடேசப்பா நேற்று இறந்தார். கடந்த, 10ல், வேப்பனஹள்ளி அருகே இதே ஒற்றை யானை தாக்கி விவசாயிகள் நாகராஜ், சந்திரன் ஆகியோர் பலியாகினர். முன்னதாக அதற்கு சில நாட்களுக்கு முன், இந்த ஒற்றை யானை கர்நாடக மாநிலம் பங்காருபேட்டில் சுற்றி திரிந்துள்ளது. அங்கு இந்த யானை இருவரை தாக்கி கொன்றுள்ளது. மொத்தம் ஐந்து பேரை கொன்றுள்ள இந்த யானையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தபோது, யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இதுபோல, ஓசூர் வனக்கோட்டத்தில் நான்கு யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல ஓசூர், கானலட்டியில் இரு சிறுத்தைகள் இதேபோல மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டுள்ளன. அடங்காமல் சுற்றி வரும் ஒற்றை யானையால் மேலும் உயிர்பலி ஏற்படாமல் இருக்க, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X