மாநகர் காங்., சார்பில் நல உதவிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநகர் காங்., சார்பில் நல உதவிகள்

Added : செப் 13, 2021
Share
சேலம்: சேலம் மாநகர் காங்., சார்பில், காமராஜரின், 119வது பிறந்தநாளையொட்டி நல உதவிகள் வழங்கப்பட்டன. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்து, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட, 11 மளிகை பொருள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். அதை, ஏழை, எளிய மக்கள் பெற்று கொண்டனர். மொத்தம், 400 பேருக்கு வழங்கப்பட்டது. அதன் மதிப்பு தலா, 500 ரூபாய். தொடர்ந்து வார்டு வாரியாக தூய்மை பணியாளர்கள், 600 பேருக்கு மளிகை

சேலம்: சேலம் மாநகர் காங்., சார்பில், காமராஜரின், 119வது பிறந்தநாளையொட்டி நல உதவிகள் வழங்கப்பட்டன. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்து, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட, 11 மளிகை பொருள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். அதை, ஏழை, எளிய மக்கள் பெற்று கொண்டனர். மொத்தம், 400 பேருக்கு வழங்கப்பட்டது. அதன் மதிப்பு தலா, 500 ரூபாய். தொடர்ந்து வார்டு வாரியாக தூய்மை பணியாளர்கள், 600 பேருக்கு மளிகை தொகுப்பு வழங்கப்படும் என, விழாவில் அறிவிக்கப்பட்டது. வர்த்தகப்பிரிவு தலைவர் சுப்ரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமுருகன், மாநகர் முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X