பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பிரமுகர் இல்ல விழா: ஸ்டாலின் படத்துடன் பேனர்

Added : செப் 13, 2021
Share
Advertisement
வீரபாண்டி: தி.மு.க.,வினர் கட்சி மற்றும் இல்ல விழாக்களில், பேனர்கள் வைக்க வேண்டாம் என, முதல்வர் உத்தரவிட்டதை மீறி, சேலம் அருகே தி.மு.க., பிரமுகர் இல்ல விழாவில் ஸ்டாலின் படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டன. அரசியல் கட்சிகளின் வரவேற்பு, விளம்பர தட்டிகள், பேனர்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. சென்னையில் பேனர் சரிந்து விழுந்து, பெண் பொறியாளர் பலியானார். சமீபத்தில்

வீரபாண்டி: தி.மு.க.,வினர் கட்சி மற்றும் இல்ல விழாக்களில், பேனர்கள் வைக்க வேண்டாம் என, முதல்வர் உத்தரவிட்டதை மீறி, சேலம் அருகே தி.மு.க., பிரமுகர் இல்ல விழாவில் ஸ்டாலின் படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டன. அரசியல் கட்சிகளின் வரவேற்பு, விளம்பர தட்டிகள், பேனர்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. சென்னையில் பேனர் சரிந்து விழுந்து, பெண் பொறியாளர் பலியானார். சமீபத்தில் விழுப்புரத்தில் கட்சி நிகழ்ச்சிக்காக, கொடி கட்ட குழி தோண்டிய போது மின்சாரம் பாய்ந்து மாணவன் பலியானார். இதையடுத்து, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் 'கட்சியினர் யாரும் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இல்ல விழாக்களுக்கு விளம்பர பேனர்கள் வைக்க கூடாது' என, உத்தரவிட்டார். இந்நிலையில் சேலம் ஒன்றிய, தி.மு.க., செயலாளரும், திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கத்தின் இல்ல திருமண வரவேற்பு விழா, நேற்று சேலம் சிவதாபுரம் தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்காக, சித்தர்கோவில் பிரதான சாலையில் சிவதாபுரம் முதல், திருமலைகிரி பஸ் ஸ்டாப் வரை, இரண்டு கி.மீ., தூரத்துக்கு சாலையின் இருபுறங்களிலும் குறிப்பிட்ட இடைவெளியில் முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மற்றும் மணமக்கள் படங்களுடன் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலையில் நீட்டிக்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்களால், சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலத்த காற்றில், பேனர் சரிந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விடுமோ என்ற சூழல் ஏற்பட்டது. கட்சி தலைவரின் உத்தரவை மீறி, அவரது படத்துடன் பேனர் வைத்திருந்த, தி.மு.க., பிரமுகரின் செயல் நிர்வாகிகளை மட்டுமன்றி, பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X