தாரமங்கலம் போலீசார் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாரமங்கலம் போலீசார் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்

Added : செப் 13, 2021
Share
ஓமலூர்: வாலிபர்களை தாக்கியதாக, இரண்டு போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். தாரமங்கலம், கண்ணனூர் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் நேற்று முன் தினம் இரவு, 12:00 மணியளவில் இளைஞர்கள் சிலர் திரண்டிருந்தினர். ரோந்து பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., பாலு, ஏட்டு தங்கராஜ் ஆகியோர், தாரமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்த தொழிலாளிகள் அஜீத், 25, சூர்யா, 25, ஆகிய இருவரையும்

ஓமலூர்: வாலிபர்களை தாக்கியதாக, இரண்டு போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். தாரமங்கலம், கண்ணனூர் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் நேற்று முன் தினம் இரவு, 12:00 மணியளவில் இளைஞர்கள் சிலர் திரண்டிருந்தினர். ரோந்து பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., பாலு, ஏட்டு தங்கராஜ் ஆகியோர், தாரமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்த தொழிலாளிகள் அஜீத், 25, சூர்யா, 25, ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். ஓமலூர் அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளான எஸ்.எஸ்.ஐ.,பாலு, ஏட்டு தங்கராஜ் ஆகிய இருவரை, சேலம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து சேலம் எஸ்.பி.,ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X