சேலம்: சேலம், தாதகாப்பட்டி ராபர்ட் ராமசாமி நகரில், பகுதி நேர நூலகம் நேற்று திறக்கப்பட்டது. அதற்காக, நகரின் குடியிருப்போர் நலச்சங்கத்திடம், நூலக அறை மற்றும் தளவாடங்ககளை மாவட்ட பொது நூலகத்துறை தானமாக பெற்று புதிதாக நூலகம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் கார்மேகம், குத்துவிளக்கேற்றி பகுதிநேர நூலகத்தை திறந்து வைத்தார்.
மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி கூறியதாவது: கலை, இலக்கியம், கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, வரலாறு, சிறுவர்களுக்கான புத்தகம் என, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 500 புத்தகங்கள் நூலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. தினக்கூலி அடிப்படையில் ஊழியர் நியமிக்கப்பட்டு, காலை, 8:00-11:00 மணி வரை பகுதி நேர நூலகம் இயங்கும். அத்துடன் சேர்த்து மாவட்டத்தில், பகுதி நேர நூலக எண்ணிக்கை, 39 ஆக அதிகரித்துள்ளது. வாசகர்கள் வருகை, புரவலர் எண்ணிக்கை அதிகரிப்பை பொறுத்து, நூலகம் தகுதி உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். எம்.பி., பார்த்திபன், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன் உள்பட குடியிருப்போர் நலச்சங்கத்தினர், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE