சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அருகே 'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை

Added : செப் 13, 2021
Share
Advertisement
மேட்டூர்: 'நீட்' தேர்வுக்கு பயந்து, மேட்டூர் அருகே மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் - சிவஜோதி மகன் தனுஷ், 20. மேட்டூர் பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவத்தின் உறவினர். பிளஸ் 2 படித்துள்ள இவர், மருத்துவம் படிப்பதற்காக, ஏற்கனவே இரு

மேட்டூர்: 'நீட்' தேர்வுக்கு பயந்து, மேட்டூர் அருகே மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.


சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் - சிவஜோதி மகன் தனுஷ், 20. மேட்டூர் பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவத்தின் உறவினர். பிளஸ் 2 படித்துள்ள இவர், மருத்துவம் படிப்பதற்காக, ஏற்கனவே இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். அதன்பின், ஜே.இ.இ., அக்ரி என பிற உயர்கல்வி பயில தேர்ச்சி பெற்ற போதிலும், அதில் சேராமல், மூன்றாவது முறை நீட் தேர்வு எழுத, மும்முரமாக படித்தார். மேச்சேரி காவிரி பாலிடெக்னிக் மையத்தில், தனுஷ் நேற்று நீட் தேர்வு எழுத இருந்தார். நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் வீட்டில் தனி அறையில் படித்து கொண்டிருந்த தனுஷ், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் மூன்றாவது முறையும் தோல்வி அடைந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில், தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தனுஷ் உடலுக்கு, நேற்று மதியம் முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்.பி., சந்திரசேகரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மதியம், 3:00 மணிக்கு, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மகேஷ் உள்ளிட்டோர், தனுஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

ரூ.10 லட்சம் நிதி: மாணவர் தனுஷ் குடும்பத்துக்கு தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, தி.மு.க., சார்பில், 10 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார். நேற்று மாலை, மாணவர் உடல், அவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கமல் ஆறுதல்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மொபைல் போனில், மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

வாசன் வேண்டுகோள்: த.மா.கா., தலைவர் வாசன்: தற்கொலை என்பது பிரச்னைக்கு முடிவு ஆகாது. இதுபோன்ற செயலில், இனிமேல் யாரும் ஈடுபடக் கூடாது. மாணவர்கள் மிகுந்த மன உறுதியோடு இருக்க வேண்டும்.

தமிழக அரசு மீது 'மாஜி' குற்றச்சாட்டு: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாவது: இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா, தடை செய்யப்படுமா என்ற குழப்பம் மக்களிடம் இருந்தது. அந்த குழப்பத்தை அரசு போக்கி இருக்க வேண்டும் அல்லது நீட் தேர்வு நிச்சயம் வரும் என அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் சட்டசபையில் நீட் தேர்வுக்கான விதி விலக்கு கேட்டு சட்டம் இயற்ற போகிறோம் என, கூறியுள்ளார். இது, மாணவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நீட் தேர்வு நடக்கும் நிலையில், கவர்னர் உரையின் போது நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என, தெளிவாக கூறும்படி சட்டசபையில் இருமுறை கேள்வி எழுப்பியும் சரியான பதில் இல்லை. இதனால், மாணவர்களுக்கு குழப்பம் நீடிக்கிறது. சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்மொழிவு கொண்டு வந்தால், எடுக்கும் முடிவை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அங்கு தெரிவிப்பர். இவ்வாறு, அவர் கூறினார்.

நீட் தேர்வு ரத்து: அமைச்சர் நம்பிக்கை: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து கட்சியினரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பள்ளிகள் திறப்புக்கு பின் மாணவர்கள் வருகை, கொரோனா தடுப்பு உள்ளிட்டவைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தமிழகத்தில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது தொடர்பாக, வரும் 15ம் தேதி பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன்பின் பள்ளிகள் திறப்பு குறித்து, முதல்வர் முடிவெடுப்பார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X