பொது செய்தி

தமிழ்நாடு

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு

Added : செப் 13, 2021
Share
Advertisement
எலச்சிபாளையம்: நாமக்கல் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பாக, எலச்சிபாளையம் ஒன்றியம் மாணிக்கம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மனநல மருத்துவர் ஜெயந்தி பேசியதாவது: தற்கொலை என்பது ஒருவரின் சுய முடிவாக இருந்தாலும் அதற்கு காரணமாக இருப்பது சமுதாய பிரச்னைகளே. நம் நாட்டில் தற்கொலைக்கு தூண்டும் காரணங்களில்

எலச்சிபாளையம்: நாமக்கல் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பாக, எலச்சிபாளையம் ஒன்றியம் மாணிக்கம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மனநல மருத்துவர் ஜெயந்தி பேசியதாவது: தற்கொலை என்பது ஒருவரின் சுய முடிவாக இருந்தாலும் அதற்கு காரணமாக இருப்பது சமுதாய பிரச்னைகளே. நம் நாட்டில் தற்கொலைக்கு தூண்டும் காரணங்களில் முக்கியமானவை வரதட்சணை, திருமணம் நின்று போதல், விவாகரத்து, வறுமை, கடன் பிரச்னை, வேலையில்லா பிரச்னை, படிப்பில் தோல்வி மனச்சோர்வு போன்றவை ஆகும். இந்தியாவில், 90 சதவீத தற்கொலைகளுக்கு மனரீதியான பிரச்னைகளே காரணம். எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது, தற்கொலையைப் பற்றி சூசகமாக பிறருக்கு தெரிவித்தல், தனிமையில் இருப்பது, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மவுனமாய் இருத்தல் உள்ளிட்டவை தற்கெலை எண்ணத்தை ஏற்படுத்தும்.' இவ்வாறு அவர் பேசினார். மேலும் மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக சமூக இடைவெளியை எவ்வாறு பின்பற்ற வேண்டுமென்று ஆலோசனை வழங்கப்பட்டது. மனநல ஆலோசகர் ரமேஷ் மூச்சுப் பயிற்சி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X