பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்., வழித்தடத்தில் முழுமையான போக்குவரத்து அவசியம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஆர்.எஸ்.வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து போதுமானளவு இல்லாததால் பொதுமக்களும், மாணவ, மாணவியரும் வேலைக்கு செல்வோரும் மிகவும் அவதிப்படுகின்றனர்.பள்ளிபாளையம் பகுதியில் ஆர்.எஸ்.,வழித்தடத்தில் ஐந்து அரசு பஸ், நான்கு தனியார் பஸ்கள் செயல்படுகின்றன. இந்த வழித்தடத்தில் ஏராளமான பகுதிகள் உள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களிலும்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஆர்.எஸ்.வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து போதுமானளவு இல்லாததால் பொதுமக்களும், மாணவ, மாணவியரும் வேலைக்கு செல்வோரும் மிகவும் அவதிப்படுகின்றனர்.
பள்ளிபாளையம் பகுதியில் ஆர்.எஸ்.,வழித்தடத்தில் ஐந்து அரசு பஸ், நான்கு தனியார் பஸ்கள் செயல்படுகின்றன. இந்த வழித்தடத்தில் ஏராளமான பகுதிகள் உள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் இருக்கும். இந்த வழித்தடம் பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் ஈரோட்டிற்கு வேலைக்கு செல்கின்றனர். அவர்கள் பஸ்சில் தான் சென்று வருவர். மேலும் மாணவ, மாணவியரும் அதிக எண்ணிக்கையில் சென்று வருவர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பஸ் போக்குவரத்து மீண்டும் செயல்பட துவங்கி விட்டது. ஆனால் இந்த வழித்தடத்தில் குறைந்தளவு பஸ்கள் மட்டுமே செயல்படுகின்றன. இதனால் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக காலை நேரத்தில் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் முழுமையாக போக்குவரத்து செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X