பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசனம் குறித்த தொழில் நுட்ப பயிற்சி

Added : செப் 13, 2021
Share
Advertisement
ப.வேலூர்: பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. வேளாண்மையில் பாசனநீரின் தேவை கூடுதலாக இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயிகள் மாற்று வழியாக நவீன நீர் பாசனத்தை மேற்கொள்ள வேண்டும். இது, 30 - 70 சதவீதம் வரை பாசனநீர் சேமிக்கப்படுவதுடன் செலவும் மிச்சமாகிறது என, பரமத்தி வட்டார வேளாண்

ப.வேலூர்: பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. வேளாண்மையில் பாசனநீரின் தேவை கூடுதலாக இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயிகள் மாற்று வழியாக நவீன நீர் பாசனத்தை மேற்கொள்ள வேண்டும். இது, 30 - 70 சதவீதம் வரை பாசனநீர் சேமிக்கப்படுவதுடன் செலவும் மிச்சமாகிறது என, பரமத்தி வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொ) பாபு பேசினார். நடப்பு பருவ பயிர் களுக்கான மானியத்திட்டங்கள், பயிற்சியின் நோக்கம், அதன் பயன்கள், நுண்ணீ பாசன கருவிகள் கருத்துக்கண்காட்சி குறித்து நாமக்கல் வேளாண் பொறியியல்துறை உதவிப்பொறியாளர் தீபா விளக்கமளித்தார். சொட்டுநீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் மற்றும் மழைத்தூவி, தொழில்நுட்பங்கள், அதன் பயன்கள், அதன் பராமரிப்பு ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி வட்டார தொழில் நுட்ப மேலாளர் திரேகப்ரியா ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X