எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா

Added : செப் 13, 2021
Share
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது. குமாரபாளையம்- பள்ளிபாளையம் சாலையில் எம்.எல்.ஏ., அலுவலகம் செயல்பட்டு வந்தது. அலுவலகம் பராமரிக்கப்பட்டு பெயின்டிங் பணி நடந்தது. இதன் திறப்பு விழா நேற்று, நகர செயலர் நாகராஜன் தலைமையில் நடந்தது. அலுவலகத்தை எம்.எல்.ஏ., தங்கமணி திறந்து வைத்தார். அதன் பின் குத்துவிளக்கேற்றி வைத்து, முன்னாள் முதல்வர்கள்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது. குமாரபாளையம்- பள்ளிபாளையம் சாலையில் எம்.எல்.ஏ., அலுவலகம் செயல்பட்டு வந்தது. அலுவலகம் பராமரிக்கப்பட்டு பெயின்டிங் பணி நடந்தது. இதன் திறப்பு விழா நேற்று, நகர செயலர் நாகராஜன் தலைமையில் நடந்தது. அலுவலகத்தை எம்.எல்.ஏ., தங்கமணி திறந்து வைத்தார். அதன் பின் குத்துவிளக்கேற்றி வைத்து, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, மாற்றுக்கட்சியினர் பலர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X