நாமக்கல் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம்

Added : செப் 13, 2021
Share
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்கும் வகையில், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, நேற்று, சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அதற்காக, மாவட்டம் முழுவதும், 620 நிலையான முகாம், 80 நடமாடும் வாகன முகாம் என, மொத்தம், 700 முகாம்கள் அமைக்கப்பட்டன. தடுப்பூசி செலுத்தும் பணிகளில், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த, 893 செவிலியர்கள், 360

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்கும் வகையில், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, நேற்று, சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அதற்காக, மாவட்டம் முழுவதும், 620 நிலையான முகாம், 80 நடமாடும் வாகன முகாம் என, மொத்தம், 700 முகாம்கள் அமைக்கப்பட்டன. தடுப்பூசி செலுத்தும் பணிகளில், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த, 893 செவிலியர்கள், 360 தன்னார்வலர்கள், 1,400 பள்ளி ஆசிரியர்கள், 160 சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தபட்டனர். நேற்று, காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை நடந்த இந்த சிறப்பு முகாமில், ஆதார் அட்டை பதிவு செய்து, பொதுமக்களுக்கு, முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, 78 ஆயிரத்து, 550 டோஸ் 'கோவாக்சின்', 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தன. இறுதியாக, 80 ஆயிரத்து, 630 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X