பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு தடுப்பூசி முகாம்: கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு

Added : செப் 13, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நேற்று, சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 620 நிலையான முகாம், 80 நடமாடும் வாகன முகாம் மூலம், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. ப.வேலூர் பேரூராட்சி, சங்கர கந்தசாமிக்கண்டர் துவக்கப்பள்ளி, பரமத்தி ஒன்றியம், நல்லியாம்பாளையம்புதூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி, பரமத்தி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நேற்று, சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 620 நிலையான முகாம், 80 நடமாடும் வாகன முகாம் மூலம், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. ப.வேலூர் பேரூராட்சி, சங்கர கந்தசாமிக்கண்டர் துவக்கப்பள்ளி, பரமத்தி ஒன்றியம், நல்லியாம்பாளையம்புதூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி, பரமத்தி ஊராட்சி துவக்கப்பள்ளி. பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாமக்கல் ஒன்றியம், கீழ்சாத்தம்பூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி, நாமக்கல் நகராட்சி, கூட்டுறவு தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஆகிய பகுதிகளில் நடக்கும் முகாம், பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருவது, மையங்களில் அரசின் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுவது ஆகியவற்றை, கலெக்டர் ஸ்ரேயா சிங், கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு, பயிற்சி துறை இயக்குனர் வீரராகவ ராவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதையும், தடுப்பூசி செலுத்திய பின் அவர்களிடம் உடல் நலன் குறித்தும் விசாரித்ததுடன், முகாம் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ குழுவினர், செவிலியர்கள், பணியாளர்களிடம், மக்கள் வருகை குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'கொரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம்' கட்டுப்பாட்டு அறையில், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள எண்ணிக்கை விபரங்களை, அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X