கால அட்டவணை அமைக்கப்படுமா?| Dinamalar

கால அட்டவணை அமைக்கப்படுமா?

Added : செப் 13, 2021
Share
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பஸ் நிறுத்தத்தில் கால அட்டவணை இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். பள்ளிபாளையம் பஸ் நிறுத்தத்திலிருந்து நாமக்கல், சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, குமாரபாளையம் மற்றும் பல பகுதிகளுக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பஸ் வரும். மேலும், கிராமப்புறப்பகுதிக்கும் பஸ்கள் வரும். ஆனால் இவை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வந்து செல்லும்.

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பஸ் நிறுத்தத்தில் கால அட்டவணை இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். பள்ளிபாளையம் பஸ் நிறுத்தத்திலிருந்து நாமக்கல், சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, குமாரபாளையம் மற்றும் பல பகுதிகளுக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பஸ் வரும். மேலும், கிராமப்புறப்பகுதிக்கும் பஸ்கள் வரும். ஆனால் இவை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வந்து செல்லும். குறிப்பாக, பள்ளிபாளையத்தில் இருந்து, கொக்கராயன்பேட்டை, சேந்தமங்கலம், ஓமலூர், வேலூர், சோழசிராமணி, மேட்டூர், இறையமங்கலம், மற்றும் பல பகுதிகளுக்கு ஒரு சில பஸ்கள், குறிப்பிட்ட நேரதத்தில் தான் வரும். இந்த பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள், பஸ் எப்போதும் வரும், எந்த நேரத்திற்கு வரும் என தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகளின் நலன்கருதி பஸ் நிறுத்தத்தில் கால அட்டவணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X