ஸ்டேஷன் அருகே சுகாதார சீர்கேடு| Dinamalar

ஸ்டேஷன் அருகே சுகாதார சீர்கேடு

Added : செப் 13, 2021
Share
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் சேலம்- திருச்செங்கோடு சாலையையொட்டி அப்பகுதியை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக குப்பை கொட்டி வருகின்றனர். அதிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு,

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் சேலம்- திருச்செங்கோடு சாலையையொட்டி அப்பகுதியை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக குப்பை கொட்டி வருகின்றனர். அதிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அருகிலேயே போலீஸ் ஸ்டேஷன் அமைந்திருப்பதால் இங்கு வருகின்ற அதிகாரிகள் மற்றும் மக்கள் சிரமப் படுகின்றனர். எனவே, போலீஸ் ஸ்டேஷன் அருகே குப்பை தொட்டி வைத்து பராமரிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X