பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த தயார்

Added : செப் 13, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுார் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் விடுபட்ட திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை என ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ம் தேதிகள் நடைபெறும், என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.வேலுார்,

வேலுார்:வேலுார் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் விடுபட்ட திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை என ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ம் தேதிகள் நடைபெறும், என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறினர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:
திருப்பத்துார் மாவட்டம்:
திருப்பத்துார், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், மாதனுார் ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்கள், 13 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 125 ஒன்றிய குழு வார்டுகள், 208 ஊராட்சி தலைவர், 1,779 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 1,221 ஓட்டுச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.மாதனுார், ஆம்பூர், ஆலங்காயம், ஜோலார்பேட்டை, கந்திலி, கெஜல்நாயக்கன்பட்டி, திருப்பத்துார், வகுகம்முத்தம்பட்டி, குரிசிலாப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் ஓட்டுகள் எண்ணப்படும்.மொத்தம் 6 லட்சத்து 64 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர்.
வேலுார் மாவட்டம்:அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி, காட்பாடி, கே.வி.குப்பம்., பேர்ணம்பட்டு, வேலுார் என ஏழு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது.14 மாவட்ட கவுன்சிலர்கள், 138 ஒன்றிய கவுன்சிலர்கள், 247 ஊராட்சி தலைவர்கள், 2,071 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2,470 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 1,331 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.மொத்தம் 7 லட்சத்து 16 ஆயிரத்து 984 வாக்காளர்கள் உள்ளனர். இறைவன்காடு, குடியாத்தம், கே.வி. குப்பம், காட்பாடி, கணியம்பாடி, பேர்ணாம்பட்டு, வேலுார் ஆகிய ஏழு இடங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம்: அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், திமிரி, வாலாஜாபேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் 288 கிராம பஞ்சாயத்துக்கள், 2,230 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 127 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்கிறது.1,410 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 லட்சத்து 67 ஆயிரத்து 237 வாக்காளர்கள் உள்ளனர். அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், திமிரி, வாலாஜாபேட்டை ஆகிய ஏழு இடங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X