பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு

Added : செப் 13, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், 540 இடங்களில் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வீரராகவ ராவ், கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர் தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்சமாதேவி அரசு தொடக்கப்பள்ளி, மேலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஈக்விடாஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த முகாம்களை ஆய்வு செய்தனர். அப்போது,

கரூர்: கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், 540 இடங்களில் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வீரராகவ ராவ், கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர் தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்சமாதேவி அரசு தொடக்கப்பள்ளி, மேலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஈக்விடாஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த முகாம்களை ஆய்வு செய்தனர். அப்போது, கலெக்டர் பிரபுசங்கர் கூறியதாவது: மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, முதல் தவணை தடுப்பூசியினை நான்கு லட்சத்து, 9,300 பேர்; இரண்டாவது தவணை, ஒரு லட்சத்து, 13ஆயிரத்து, 742 பேர் செலுத்திக்கொண்டுள்ளனர். இந்த சிறப்பு முகாம்களில், 50 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை என அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினர். இவ்வாறு, அவர் கூறினார். பொது சுகாதார இணை இயக்குனர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, தாசில்தார் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் நடந்த முகாம்களில், இலக்கை தாண்டி, 61 ஆயிரத்து, 724 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X