குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு

Updated : செப் 15, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (2+ 4)
Share
Advertisement
காந்திநகர் : குஜராத் முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த பூபேந்திர படேல், 59, நேற்று பதவியேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.படேலுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். குஜராத் சட்டசபைக்கு அடுத்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் முதல்வராக இருந்த விஜய் ரூபானி திடீரென தன்
குஜராத் முதல்வர், பூபேந்திர படேல் ,

காந்திநகர் : குஜராத் முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த பூபேந்திர படேல், 59, நேற்று பதவியேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.படேலுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

குஜராத் சட்டசபைக்கு அடுத்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் முதல்வராக இருந்த விஜய் ரூபானி திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார்.

காந்திநகரில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜ.,வின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பூபேந்திர படேல், புதிய முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.இதையடுத்து பூபேந்திர படேல், முதல்வராக நேற்று பதவியேற்றார். கவர்னர் ஆச்சாரிய தேவவிரத் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.'ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி முதல்வர் மட்டும் பதவியேற்றார். ஆலோசனைகளுக்குப் பின் அமைச்சர்கள் பட்டியல் தயாரிக்கப்படும்' என, கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.மிக எளிமையாக நடந்த பதவியேற்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பதவியேற்றதும் பூபேந்திர படேலுக்கு, அமித் ஷா கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
'முதல்வராக பதவியேற்றுள்ள பூபேந்திர படேலுக்கு வாழ்த்துகள். அவரது சமூக நலப் பணிகளை நேரடியாக பார்த்துஉள்ளேன். 'அவரது தலைமையில் குஜராத் மேலும் வளர்ச்சி அடையும்' என, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

'கடந்த ஐந்து ஆண்டுகளாக மிகச் சிறப்பாக மக்கள் நலத் திட்டங்களை விஜய் ரூபானி மேற்கொண்டார். 'ஓய்வில்லாமல் மக்கள் நலப் பணியாற்றியுள்ள அவர் தன் பணிகளைத் தொடர்ந்து செய்வார் என நம்புகிறேன்' என, மற்றொரு பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.


வருத்தம் இல்லை!



முதல்வர் பதவி எனக்கு கிடைக்காததற்கு வருத்தம் இல்லை. நான் அதிருப்தி அடைந்துள்ளதாக ஊடகங்கள் தான் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அது தான் அவர்கள் தொழில். கட்சி எனக்கு பெரிய பொறுப்பை அளித்துள்ளது. கட்சிக்காகவும், சமூகத்துக்காகவும், மாநிலத்துக்காகவும் தொடர்ந்து சேவை செய்வேன்.நிதின் படேல், குஜராத் முன்னாள் துணை முதல்வர், பா.ஜ.,

Advertisement




வாசகர் கருத்து (2+ 4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E. RAJAVELU - Chennai,இந்தியா
14-செப்-202117:31:05 IST Report Abuse
E. RAJAVELU குஜராத் பிஜேபியின் கடைசி முதல்வர்..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-செப்-202106:57:50 IST Report Abuse
Kasimani Baskaran இந்த முறையும் காங்கிரசுக்கு அல்வா உறுதி என்பதை பலர் வலியுறுத்தியுள்ளார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X