தி.மு.க., பிரமுகர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பிரமுகர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து

Added : செப் 13, 2021
Share
கரூர்: வேலாயுதம்பாளையத்தில், தி.மு.க., பிரமுகர் உள்பட, இரண்டு பேரை கத்தியால் குத்தி விட்டு போலீஸ்காரர் ஒருவர் தப்பி விட்டார்.திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் ஹனிப், 35; இவர், கரூர் மாவட்டம் மாயனூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக வேலை செய்து வருகிறார். கரூர் அருகே புகளூரில் வசித்து வரும் இவருடைய அண்ணன் மனைவி ஷகிலா பானு, அவருடைய தங்கை கணவர் அலாவுதீன் என்பவரிடம்,

கரூர்: வேலாயுதம்பாளையத்தில், தி.மு.க., பிரமுகர் உள்பட, இரண்டு பேரை கத்தியால் குத்தி விட்டு போலீஸ்காரர் ஒருவர் தப்பி விட்டார்.


திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் ஹனிப், 35; இவர், கரூர் மாவட்டம் மாயனூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக வேலை செய்து வருகிறார். கரூர் அருகே புகளூரில் வசித்து வரும் இவருடைய அண்ணன் மனைவி ஷகிலா பானு, அவருடைய தங்கை கணவர் அலாவுதீன் என்பவரிடம், மொபைல் போனில் பல மாதங்களாக பேசி வந்துள்ளார். அதை ஹனிப் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று, வேலாயுதம்பாளையத்தில் இறைச்சிக்கடை நடத்தி வரும் அலாவுதீனிடம், 'அண்ணன் மனைவி ஷகிலா பானுவிடம், எதற்காக மொபைல் போனில் பேசுகிறாய்' என்று கேட்டு, ஹனிப் தகராறு செய்துள்ளார். அப்போது, கடையில் இருந்த அலாவுதீனின் தந்தை அக்பர், 56, இம்ரான்கான், 30, ஆகியோர் ஹனிப்பை தடுத்துள்ளனர். ஆத்திரமடைந்த ஹனிப், அக்பர், இம்ரான்கான் ஆகியோரை கத்தியால் குத்தி விட்டு தப்பி விட்டார். காயமடைந்த இருவரும், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்ரான்கான் புகளூர் பகுதி, தி.மு.க., இளைஞரணி அமைப்பாளராக இருந்தவர். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X